மூத்த வழக்குரைஞர் மயிலாடுதுறை முருக.மாணிக்கம் மறைவு கழகத் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 7, 2023

மூத்த வழக்குரைஞர் மயிலாடுதுறை முருக.மாணிக்கம் மறைவு கழகத் தலைவர் இரங்கல்

மயிலாடுதுறை மூத்த வழக்குரை ஞரும், சுயமரியாதைக் கொள்கை வீரரும், தி.மு.க.விலும், வழக்குரைஞர் அமைப்பிலும் பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவரும், எனது சட்டக் கல்லூரி நண்பருமான மானமிகு முருக.மாணிக்கம் அவர்கள் (வயது 91) உடல்நலக் குறைவின் காரணமாக இன்று (7.2.023)காலை மயிலாடுதுறையில் மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் எமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

No comments:

Post a Comment