மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை கடைசி நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 27, 2023

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை கடைசி நாள்

சென்னை, பிப்.27 ஒன்றிய அரசு அறிவுறுத்தலின்பேரில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின்நுகர்வோரின் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு நவ. 15ஆம் தேதி தொடங்கியது.

இதற்காக, தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. முதலில், டிச.31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. பலரும் ஆதாரை இணைக்காததால், ஜன.31, பிப்.15 என அவகாசம் அளிக்கப்பட்டு, பின்னர்பிப்.28ஆம் தேதி (நாளை) வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை 99 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இந்த கெடு நாளையுடன் (28.2.2023) முடிகிறது. இதற்குமேல் அவகாசம் வழங்கப்படாது என்று மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment