ஏழுமலையான் கோயிலா? பிளாஸ்டிக் குப்பைகளின் குவியலா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 2, 2023

ஏழுமலையான் கோயிலா? பிளாஸ்டிக் குப்பைகளின் குவியலா?

திருப்பதி, பிப்.2 திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முற்றிலுமாக தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

இதனால் லட்டு பைகளுக்கு பதிலாக விலை அதிகமுள்ள சணல் பைகளையும், ரூ.3, 6 விலையுள்ள மட்கும் பைகளையும் பக்தர்களுக்கு விநியோகம் செய்கிறது. இதனால் லட்டு விலையையும் ஏற்றி விட்டு, பை விலையையும் தேவஸ்தானம் ஏற்றியுள்ளதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.

இந்நிலையில் அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பாப்கார்ன், சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் வெளியில் இருந்து ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது. அலிபிரி சோதனைச் சாவடியைகடந்து இவை எப்படி திரு மலைக்கு வருகின்றன? இதனை தேவஸ் தான அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள பக்தர்கள் சிலர் கேள்வி எழுப்பு கின்றனர்

No comments:

Post a Comment