மேகதாதுவில் அணை கட்ட கருநாடகம் தயாராம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 5, 2023

மேகதாதுவில் அணை கட்ட கருநாடகம் தயாராம்

 பெங்களூரு, பிப். 5- உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கினால் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கருநாடக அரசு தயாராக உள்ளதாக பசவராஜ் பொம்மை கூறினார். கருநாடகம் - தமிழ்நாடு எல்லையில் ராமநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்து அதற்காக முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நடந்து வரும் நிலையில், கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டில்லி சென்று மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் பெங்களூருவில் அவர்  கூறியதாவது:- "பிரதமர் மோடி நமது நாட்டை வேகமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோ ளுடன் இருந்து வருகிறார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தீவிரமாக உழைக்கிறார். அதற் கான திட்டங்களையும் வகுத்து வருகிறார்.  மேகதாது அணை கட்டும் திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி இல்லாத பட்சத்தில் எதுவும் செய்ய சாத்திய மில்லை. திட்ட அறிக்கை கூடிய விரை விலேயே அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். முந்தைய நிதிநிலை அறிக்கையில் மேகதாது திட்டத் திற்காக ரூ.1,000 கோடியை கருநாடக அரசு ஒதுக்கி இருந்தது. ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், கருநாடகத்தில் செயல்படுத் தப்படும் திட்டங்களுக்காக கூடிய விரைவில் நிதி கிடைக்க உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment