எதிரொலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 21, 2023

எதிரொலி

ராச‘லீலை'யில் ஈடுபட்ட வளர்ப்புத் தாய் 

ஜக்கி சொன்ன கிருஷ்ணன் கதை

ஜக்கி வாசுதேவின் காட்சிப்பதிவு ஒன்று அண்மையில் காணக் கிடைத்தது. அதில் கிருஷ்ணனைப் பற்றிப் பேசு கிறார் போலும். முதலில் யசோதாவைப் பற்றிப் பேச்சைத் தொடங்குவோம் என்று ஆரம்பிக்கிறார்.

“யசோதா, கண்ணனின் வளர்ப்புத் தாய். அந்தப் பையனை மிகவும் நேசித்தவர். மகனாக மட்டுமல்ல. அதற்கும் மேலாக!

குழந்தையாக இருக்கும்போது அழகான குழந்தையாக நினைத்தார். ஆனால், வளர வளர? அவன் வேகமாக வளர ஆரம்பித்தான். அவன் வளர்ச்சி வியப்பூட்டும் வகையில் இருந்தது. எந்தத் தாயாலும் தன்னுடைய தாய்மையை அவ்வளவு அதீத வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாது. அதனால் அவனுக்கு அய்ந்து, ஆறு வயது இருக்கும்போதே யசோதா தன் தாய்மை உணர்வை இழந்துவிட்டாள். அதற்குப் பிறகு அவரால் வெறும் தாயாராக இருக்க முடிய வில்லை. அவனுடைய காதலியாகவே மாறிவிட்டாள்.

அவனை அவள் காதலித்தாள். கிருஷ்ணனுடனான யசோதாவின் உறவு வளர்ந்தது. அவளும் கோபிகைகளுள் ஒருவராக ஆகிவிட்டாள். அவரும் ராசலீலையில் ஈடு பட்டாள். அவருக்கு ராதையைப் பிடிக்காது. ராதை ரொம்ப முன்னேறி இருப்பதாக அவள் கருதினாள். அதற்கு என்ன பொருள் என்று தெரியவில்லை.” (சிரித்துக் கொள்கிறார்)

இதுதான் அந்த காணொலித் துணுக்கில் உள்ள ஜக்கி யின் பேச்சு.

யசோதா, கிருஷ்ணனின் வளர்ப்புத் தாய். ராதை, கிருஷ்ணனின் தாய் வழி அத்தை. 

இவர்கள் இருவருக்கும் ராச‘லீலை’யில் பங்கு உண்டு.

வளர்ப்பு மகனின் மீது ஆசைப்பட்ட தாய். அவருக்கு தன் மகனின் அத்தை மீது பொறாமை.

ஆபாசமும், அசிங்கமும் தான் ஹிந்து மதத்தின் அடிப்படை என்று சொன்னால், தாண்டிக் குதிப்பார்களே, மாடர்ன் சாமியார் ஜக்கி சொல்கிறாரே இந்தக் கூத்தை! இப்போது என்ன சொல்வார்கள்?

- ஈரோட்டுக் கண்ணாடி


No comments:

Post a Comment