வேளாண்மை தொழில் பயன்பாட்டு வாகனங்கள் அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 12, 2023

வேளாண்மை தொழில் பயன்பாட்டு வாகனங்கள் அதிகரிப்பு

சென்னை, பிப். 12- இந்தியாவில் வேளாண்மைக்கு விவசாயிகள் பயன்படுத்தும் வாகனங்களான டிராக்டர் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள சோனாலிகா டிராக்டர்ஸ் தனது வளர்ச்சிப் பயணத்தை 2023-ஆம் நிதி ஆண்டிலும் தொடர்கிறது. ஜனவரி மாத விற்பனையில் 26% வளர்ச்சியை எட்டி உள்நாட்டு விற்பனை 9,741 என்ற நிலையைத் தொட்டுள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது டிராக்டர்களின் விலையை தனது இணையதளத்தில் வெளியிட்டதும், வாடிக்கையாளர்களின் நலனை மய்யமாகக் கொண்ட அணுகுமுறையும் தான். 

இந்திய விவசாயிகள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையில் உயரிய தயாரிப்புகளை இந்நிறுவனம் அளித்து வருகிறது. இந்தியாவில் கோதுமை சாகுபடி பரப்பளவு அதிகரிப்பு மற்றும் அது சார்ந்த வேளாண் நடவடிக்கைகள் தீவிர மடைந்து வருவதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. வேளாண் பணிகளுக்கு உறுதுணை புரியும் வகையில் மாதந்தோறும் நடவடிக்கைகளை இந்நிறுவனம் எடுத்து வருகிறது. விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து அதை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரவும் இந்நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment