சத்தியமூர்த்தி அய்யரின் 'மறுபிறப்போ?' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 11, 2023

சத்தியமூர்த்தி அய்யரின் 'மறுபிறப்போ?'

குறுக்குவழியில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி துணை முதலமைச்சர் பதவியில் இருப்பவர் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ். இவரது மனைவி அம்ருதா பட்னவிஸ் பல்வேறு சர்ச்சைப் பேச்சுகளுக்கு புகழ்பெற்றவர்

சாமியார் ராம்தேவ் இவரை அருகில் வைத்துகொண்டு மராட்டியப் பெண்கள் எல்லாம் இந்த கலாச்சார ஆடையில் கூட அழகாக இருக்கமாட்டார்கள். என் பார்வைக்கு ஆடை இன்றி இருந்தாலே அழகாக இருப்பார்கள் என்று பேசினார். இதற்கு அருகில் அமர்ந்திருந்த அம்ருதா பட்னவிஸ் கைதட்டி ஆதரவு தெரிவித்தார். 

சமீபத்தில் சமூகவலைதளத்தில் பிரபலமான ஒருவரோடு அரசு மாளிகையில் ஆட்டம் பாட்டம் குஷியாக இருந்தார். இந்த விவகாரம் நாளிதழ்களில் வெளிவந்த பிறகு இன்றுவரை துணை முதலமைச்சர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கவில்லை.  

இந்த நிலையில் இவர் மும்பையில் நடந்த ஒரு ஆங்கில நாளிதழ் தொடர்பான விழா ஒன்றில் பேசும் போது கூறியதாவது இங்கு விபச்சாரத்தை ஒரு தொழிலாக அங்கீகரியுங்கள், ஜெர்மனியில் அது மரியாதைக்குரியது, அங்கு விலை மாதர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்து கிறார்கள். அவர்கள் தொழில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அங்கு விலைமாதர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. இங்கும் இது போல் வேண்டும்.  எதிர்காலத்தில் அது இங்கேயும் செயல்படுத்தப்படும், நான் அதை ஆதரிக்கிறேன் என்று கூறியிருந்தார்.  இவரது இந்தப்பேச்சு பெரும் பேசும் பொருளாகி உள்ளது. 

பெண் அதிகாரமளித்தல் தொடர்பான இவரது இத்தகையப் பேச்சு பலரை முகம்சுழிக்க வைத்துள்ளது. இன்றும் இந்தியா போன்ற நாடுகளில் வளர்ச்சி அடையாத மாநிலங்களில் இருந்து பெரு நகரங்களுக்கு சிறுமிகள் மற்றும் பெண்களை வேலைக்காக என்று கூறி ஏமாற்றி அழைத்துவந்து பாலியல் தொழிலில் தள்ளிவிடுவது வழக்கமாக உள்ளது. சமீபத்தில் கூட புதுடில்லியில் கென்யாவிலிருந்து இளம்பெண்களை வீட்டுவேலைக்கு என்று அழைத்துவந்து அவர்களை விபச்சாரத்தில் தள்ளிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 தமிழ்நாடு பெண்களின் உரிமைகளை மீட்க அவர்களுக்கு சொத்தில் பங்கு, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, கல்வியில் இட ஒதுக்கீடு பேருந்தில் கட்டணமில்லாப் பயணம் என்று பல புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தி அவர்களின் வாழ்க்கையை உயர்த்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. 

 ஆனால் ஒரு மாநிலத்தில் முதலமைச் சரின் மனைவியாக இருந்து கொண்டே மறைமுகமாக விபச்சாரத்திற்கும் பெண்கள் செல்லலாம் அதுவும் ஒரு தொழில்தான் என்று கூறியுள்ளார். 

 1930களின் சத்யமூர்த்தி அய்யரும் இதையே தானே கூறினார். 

தேவதாசிகள் என்பவர்கள் தெய்வத்திற்கு தொண்டு செய்பவர்கள். அவர்கள் தேவதாசிகளாவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றார். 

அந்த நேரத்தில் தந்தை பெரியாரிடம் ஆலோசனை பெற்று சட்டசபைக்கு சென்ற மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் கொஞ்சக் காலம் சத்யமூர்த்தி அய்யரின் வீட்டுப் பெண்களும்  தேவதாசிகளாக மாறி புண்ணியம் தேடிக் கொள்ளட்டுமே என்று முகத்திலறைந்தாற்போல் கூறியிருந்தாரே? நினைவிருக்கிறதா?

 பெண் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிப்பது மற்றும் அவர்களுக்கு ஒழுக்கமான வாழ்க்கையை வழங்குவது எப்படி? எந்த ஒரு பெண்ணும் தன் உடலை வைத்து வாழ வேண்டியதில்லை.. மதச்சார்பற்ற மேற்கத்திய கலாச்சார ஹிந்துக்கள் ஆபத்தானவர்கள்.

No comments:

Post a Comment