திராவிடர் இயக்கச் செம்மல், எவரிடத்திலும் அன்புடனும், பண்புடனும் பேசிப் பழகுபவர். திரா விட முன்னேற்றக் கழக தஞ்சை தளகர்த்தர்களில் ஒருவரும், இலக்கிய ஆர்வலருமான அருமை நண்பர் தஞ்சை எஸ்.என்.எம். உபயதுல்லா (வயது 83) அவர்கள் உடல் நலக் குறைவால் தஞ்சையில் இன்று (19.2.2023) காலமானார் என்ற மிக மிக வருத்தப்படவேண்டிய செய்தி கேட்டு, அதிர்ந்து போனேன்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் பழகியவர்; அதே அளவுக்கு திராவிடர் கழகத்தின் பாலும், நம்மீதும் மிக்க அன்பு பூண்டவர். மேனாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என்பதைத் தாண்டி, ஒரு தலைசிறந்த மனிதநேயர்.
தற்போது, தி.மு.க. மாநில வர்த்தகர் அணித் தலைவராகப் பதவி வகித்து வந்தார். அவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு “அண்ணா விரு தினை” தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப் பித்தார்.
அவரது மறைவால் ஏற்பட்ட இழப்பு அவரது குடும்பத்திற்கும், தஞ்சை தி.மு.க.விற்கும் மட்டுமல்ல நமது தாய்க் கழகத்திற்கும்தான்.
அவரை இழந்து வருந்தும் அவரது இல்லத்த வர்களுக்கும், உறவுகளுக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரி வித்துக் கொள்கிறோம்!
அவருக்கு நமது வீர வணக்கம்
19.2.2023 கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம்