நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவு கழகத் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 19, 2023

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவு கழகத் தலைவர் இரங்கல்

பிரபல நகைச்சுவை நடிகர், நண்பர் மயில்சாமி (வயது 57) அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (19.2.2023) அதிகாலை சென்னையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

அவர் இடையிடையே எங்காவது சந்திக்கும் போதெல்லாம், நம்மிடம் நலம் விசாரித்து உரையாடத் தவற மாட்டார்.

அவர் சிறந்த பண்பாளர்.

10.2.2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயிலில் தொடர் பயணப் பரப்புரை முடிந்து வேனில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது, எனது வேனை அவர் பயணித்த வாகனம் முந்திச் செல்லும்போது, உடனே கைப்பேசியில் என்னுடன் உரையாடி நலம் விசாரித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

அவரது மறைவு நமது தமிழ்த் திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

அவரை இழந்து வருந்தும் அவரது அன்புக் குடும்பத்தவருக்கும், திரைப்பட உலகினருக்கும், அவரது சம்பந்தியான சட்டப் பேரவை துணைத் தலைவர் சகோதரர் கு. பிச்சாண்டி அவர்களுக்கும், நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 


                                                                                                                              கி. வீரமணி 

 19.2.2023                                                                                     தலைவர், திராவிடர் கழகம் 


No comments:

Post a Comment