தமிழ்நாட்டு மீனவர்கள்மீது தாக்குதல்: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

தமிழ்நாட்டு மீனவர்கள்மீது தாக்குதல்:

ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, பிப்.24  தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய் சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நேற்று (23.2.2023) நடத்திய தாக்குதல் சம்ப வத்தை மிகுந்த வேதனையுடன் சுட்டிக் காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி யுள்ளார். இத்தாக்குதல் நமது மீனவர்கள் மீது இலங்கை நாட்டினர் கடந்த 15.2.2023 அன்று நடத்திய சில நாட்களுக்குள் நிகழ்ந்துள்ளதையும் குறிப் பிட்டுள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21.02.2023 அன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், பாரம்பரிய கடற்பகுதி யில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, நேற்று (23.2.2023) அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படை யினர் அவர்களை இரும்பு கயிறுகளைக் கொண்டு தாக்கியதாகவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்கள், இரண்டு பேட்டரிகள், என்ஜின் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும், இத்தாக்குதலில் காயமடைந்த அய்ந்து மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தத் தாக்குதல், அனைத்து பன் னாட்டு விதிமுறைகள் மற்றும் மரபு களை அப்பட்டமாக மீறுவதாகவும், பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர் களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கைக் கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்குக் கடுமையான காயங்களையும், பொரு ளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற் படை யினரின் இத்தகைய வன்முறைச் செயல் கள் அதிர்ச்சியளிப்பதுடன், கண்டனத் திற்குரியது என்றும் தெரிவித் துள்ளார். 

நமது மீனவர்கள் தமது வாழ் வாதாரத்திற்காக மீன்பிடிப்பதை மட் டுமே நம்பியுள்ளனர் என்றும், மீனவர் கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத் தப்படுவது மீனவர்கள் மத்தியில் அச் சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ள தாகவும் முதலமைச்சர் தெரிவித்துள் ளார். 

இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் வலுவாக எடுத்துச் சென்று, நமது இந்திய மீனவர்கள் மீதான தாக் குதல்களைத் தடுக்க உயர்மட்ட அள வில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment