நெசவாளர்களுக்கான முத்ரா கடன் திட்டம் 6 ஆண்டுகளாக தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 14, 2023

நெசவாளர்களுக்கான முத்ரா கடன் திட்டம் 6 ஆண்டுகளாக தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை பிப்.14 நெசவாளர்களுக்கான முத்ரா கடன்திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தும் மாநிலங்களில், கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது. நெசவாளர் களுக்கான முத்ரா கடன் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2016 ஜுன் மாதம் தொடங்கியது. இந்த திட் டத்தின் மூலம், தொழில்மூலதனம், நெசவு இயந்திரம் வாங்குதல் உள் ளிட்ட நெசவுத் தொழில் தொடர் பான பணிகளுக்காக சலுகைக் கடன் திட்டம் செயல்படுத்தப் படுகிறது. இதன்படி, தனிப்பட்ட நெச வாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், நெசவாளர் அமைப் புகளுக்கு ரூ.20 லட்சம் மானியக் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். தகுதி வாய்ந்த நெசவாளர்களுக்கு, 3 ஆண்டுகளுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும்.

இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக முத்ரா கடன் திட் டத்தை சிறப்பாக செயல் படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இது  குறித்து மாநில அளவிலான வங்கி யாளர் குழும அதிகாரிகள் கூறிய தாவது:

நெசவாளர்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்துவ தற்காகவும் முத்ரா கடன் திட்டம் உதவுகிறது. இதில், குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தும் மாநிலங்களின் பட்டிய லில் தமிழ்நாடு கடந்த 6 ஆண்டு களாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2016-_2017-இல் ரூ.82.38 கோடி, 2017-_2018-இல் ரூ.90.12 கோடி, 2018-_2019-ல் ரூ.112 கோடி, 2019-_2020-ல் ரூ.87.32 கோடி, 2020_20-21-ல் ரூ.70.15 கோடி, 2021-_2022-ல் ரூ.65.70 கோடி அள வுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் ரூ.508 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிற மாநிலங் களுடன் ஒப்பிடுகையில் இது மிக வும் அதிகமாகும். கடந்த 2022_20-23இ-ல் முத்ரா திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் நெசவாளர்களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்.31-ஆம் தேதி வரை 11,508 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 6,377 விண் ணப்பங்கள் பரிசீலனை செய்யப் பட்டு, 6,373 நெசவாளர்களுக்கு ரூ.31.08 கோடிகடன் வழங்கப்பட் டது. மேலும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து, விரைவாக கடன் வழங்கு மாறு வங்கி களுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. மேலும், நெசவாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடன் தொகையை உயர்த்தி வழங்கு மாறும் வங்கிகளிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


No comments:

Post a Comment