17.2.2023 வெள்ளிக்கிழமை சென்னை - தியாகராயர் நகரில் தென்மண்டல மொழிப்பாதுகாப்பு மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 15, 2023

17.2.2023 வெள்ளிக்கிழமை சென்னை - தியாகராயர் நகரில் தென்மண்டல மொழிப்பாதுகாப்பு மாநாடு

நாள்: 17.2.2023 காலை 10.30 மணி; இடம்: சர் பிட்டி தியாகராயர் அரங்கம், ஜி.என்.செட்டி சாலை, தியாகராயர் நகர், சென்னை.

தலைமை: பேரா.எல்.ஜவகர் நேசன், மேனாள் துணை வேந்தர், ஜே.எஸ்.எஸ்.தொழில்நுட்ப பல்கலைக் கழகம், மைசூரு); மாநாட்டை தொடங்கி வைப்பவர்: பேராசிரியர் துருவா ஜோதி முகர்ஜி (புவியியலாளர், கொல்கத்தா)

சிறப்புரை: பேராசிரியர் இரவிவர்மக்குமார் (மேனாள் அரசு வழக்குரைஞர், கருநாடகா). வீ.குமரேசன் (திராவிடர் கழகம், இணையாசிரியர், தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆங்கில மாத இதழ்). பேராசிரியர் சச்திதானந்த சின்கா (பணி நிறைவு பேராசிரியர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி). பேராசிரியர் ஆர்.முரளி (மேனாள் முதல்வர், மதுரைக் கல்லூரி, மதுரை). பிஆர்பி பாஸ்கர் (மூத்த ஊடகவியலாளர், கேரளா). பேராசிரியர் ஏ.சந்திரசேகர் (மேனாள் முதல்வர், அரசு  பட்டப்படிப்புக்கான கல்லூரி, ஆந்திரப்பிரதேசம்). பேராசிரியர் வி.வெங்கட்ராமன் (வரலாற்றாளர், மேனாள் முதல்வர் ராஜூ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராஜபாளையம்). பேராசிரியர் தருண் காந்தி நஸ்கர் (பொதுச்செயலாளர், ஏ.அய்.எஸ்.இ.சி.)

பேராசிரியர் அள்ளம்பிரபு பெத்தாதுரு (மேனாள் முதல்வர், தலைவர் ஏ.அய்.எஸ்.இ.சி. கருநாடகா). டாக்டர் மரியஜோசப் எம்.மகாலிங்கம் (செயலாளர், தாளாளர், லயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை). டி.எஃப் போஸ்கோ (செயலாளர், தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள்). பேராசிரியர் அ.கருணானந்தன் (வரலாற்றாளர், தமிழ்நாடு). ஆங்கில மொழி நீக்கம், தாய் மொழி மதிப்பைக் குறைத்தல், ஹிந்தி மொழியை ஒரே அலுவலக மொழியாக்குதல் - கற்பித்தலுக்கான மொழியாக் குதல் ஆகியவற்றை எதிர்த்தும், தாய்மொழியுடன் ஆங்கிலத்தைக் கொண்ட இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தியும் 6 மாநிலங்களைக் கொண்ட மாநாடாக நடைபெறுகிறது. அனைவரும் வருக! -மாநாட்டுக் குழு

No comments:

Post a Comment