கலைஞானி கமல்ஹாசன் முடிவு கழகத் தலைவர் ஆசிரியர் வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 26, 2023

கலைஞானி கமல்ஹாசன் முடிவு கழகத் தலைவர் ஆசிரியர் வரவேற்பு

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவரான நண்பர் கலைஞானி கமலஹாசன் அவர்கள் தனது கட்சி, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நண்பர் ஈ.வெ.கி.ச.  இளங்கோவனுக்கு ஆதரவு தரும் என்று தனது அறிக்கைமூலம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

மதச் சார்பற்ற ஜனநாயகத் தத்துவங்களில் நம்பிக்கையுள்ள அவரும், அவரதுகட்சியும் இன்றுள்ள அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கினை தடுத்து நிறுத்த - மதவெறித் தீயை அணைக்க - அனைவரும் ஒன்று சேர வேண்டியது எப்படி முக்கியமோ அதனை அப்படியே உணர்ந்து அறிவித்திருப்பது சீரிய முடிவாகும். வாழ்த்துகள்.



சென்னை                                                                                                                 தலைவர்

26.1.2023                                                                                                   திராவிடர் கழகம்


No comments:

Post a Comment