இதுதான் பிஜேபி அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 14, 2023

இதுதான் பிஜேபி அரசு

சிறுபான்மையினருக்கான கல்வியை முடக்க சதி ஒதுக்கீடு வெறும் ரூ. ஒரு கோடியே!

பெங்களூரு, ஜன. 14- ஒவ் வொரு அரசும் தங்கள் மாநில மக்களின் எதிர் காலத்திற்கான கல்விக் காக செலவழிப்பதை தலையான கடமையாகக் கொண்டு செயல்படும். ஆனால் கருநாடக அரசோ தலைகீழாக சிறுபான்மையினத்தினருக்கு கல்வியை கிடைக்கவிடாமல் மறை முகமாக தடைசெய்யும் நோக்கில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளது. 

கடந்த ஆண்டு துவக் கத்தில் இஸ்லாமிய மாண விகள் அணியும் ஹிஜாப் தொடர்பான சர்ச்சை எழுந்தது.  இஸ்லாமிய மாணவிகள் அணிந்து வரும் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் துணியை பள்ளிகளுக்கு அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட ஹிந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் இணைந்து அம்மாநில முதலமைச்சர் எஸ்.ஆர்.பொம்மையி டம் கோரிக்கை வைத்தனர். 

 இதனை அடுத்து அந்த அரசு உடனடியாக ஹிஜாப் அணிய தடைவிதித்தது, பின்னர் இதற் காக உச்சநீதிமன்றத்தில் சிறுபான்மையின பாதுகாப்பு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தனர். முதலில் கருநாடக உயர் நீதிமன்றத்தில் தொடரப் பட்டது, அந்த அரசின் உத்தரவிற்கு தடை கிடை யாது என்று கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகு உச்சநீதிமன் றம் சென்றது இந்த வழக்கு. இதற்காக கரு நாடகாவின் பாஜக அரசு மாநில தலைமை வழக்கு ரைஞர் மற்றும் துணைத் தலைமை வழக்குரைஞ ருக்கு ரூ.88 லட்சத்தை வழங்கியது.  இருவரும் ஒரு நாளைக்கு ரூ 4.4 லட் சம் பெற்றனர், தலைமை வழக்குரைஞர் 9 விசார ணைகளுக்கு ஆஜரா னார். இதற்காக அவருக்கு சுமார் 40 லட்சம்  மற்றும் துணைத்தலைமை வழக் குரைஞர் 11 விசாரணை களில் ஆஜரானார். அதற் காக அவருக்கு 48.40 லட்சமும் இதர வழக்கு செலவுகள் சேர்த்து ஒரு கோடி ரூபாய் வரை செல வழித்து உள்ளது. கரு நாடக அரசின் இந்த நட வடிக்கை பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியுள் ளது. 

No comments:

Post a Comment