சமூக ஊடகங்களிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 28, 2023

சமூக ஊடகங்களிலிருந்து...

தன் நாட்டு குடிமக்கள் வெளிநாடு களில் இறந்து போனால் மரணத்திற்கான காரணத்தை ஆராய்ந்து இங்கிலாந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது எல்லா நாடுகளிலும் உள்ள பிரிட்டிஷ் ஹை கமிஷனின் பணி.

தன்னுடைய மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட குஜராத் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மற்றும் அவர்களுடைய நண்பர் என மொத்தம் மூன்று இங்கிலாந்து குடிமக் கள் 2002இல் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையில் அஹமதாபாத் அருகே கொல்லப்படுகிறார்கள்.

இவர்கள் மரணம் கலவரத்தால் தற் செயலாக நிகழ்ந்தல்ல. குஜராத் மாநில அரசு நிர்வாகத்தின் ஆதரவுடன் நடத் தப்பட்ட திட்டமிட்ட வன்முறையால் நிகழ்ந்தது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறது இங்கிலாந்து அரசு தொலைக்காட்சியான பிபிசி. 

தன் நாட்டு மக்கள் எங்கையோ கல வரத்தில் செத்துப்போனதை அப்படியே விட்டுவிட முடியாது என இங்கிலாந்து அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக் கைகளும், அதையடுத்து குஜராத் வன்முறையில் நடந்தது என்னவென்று பிபிசி வெளிக்கொணர்ந்த படைப்பு தான் தடைசெய்யப்பட்ட அந்த ஆவ ணப்படம் "ஸிமீst வீs பிவீstஷீக்ஷீஹ்".

- நெல்சன் சேவியர்


No comments:

Post a Comment