ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிட பி.ஜே.பி. அச்சம்: அ.தி.மு.க.தான் போட்டியிடும் - அண்ணாமலை பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிட பி.ஜே.பி. அச்சம்: அ.தி.மு.க.தான் போட்டியிடும் - அண்ணாமலை பேட்டி

  சென்னை, ஜன. 24- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்கக் கூடிய பலம் வாய்ந்த கட்சி அ.தி.மு.க.தான் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்த வரை எங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடக்கூடிய பெரிய கட்சி அ.தி.மு.க.தான். கூட்டணிக்கு என்று மரபு, தர்மம் உள்ளது. இடைத்தேர்தல்கள் என்பது ஒரு கட்சியின் பலத்தை, வளர்ச்சியை பார்ப்பதற்கான அளவுகோல் இல்லை. தி.மு.க. கூட்டணியை எதிர்த்து நிற்க கூடிய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக மக்கள் ஆதரவுள்ள கட்சியாக இருக்க வேண்டும். அந்த கட்சி அ.தி.மு.க தான் என்று கூறினார், 

நேற்று வரை தமிழ்நாட்டில் நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சிகள் எனது இந்தக்கருத்தால் மனம் உடைந்து போகவேண்டாம், ஆனால் மக்களின மன நிலையைத்தான் கூறுகிறேன் என்று கூறிவந்தார்.   இப்போது பலம் வாய்ந்த கட்சி அதிமுகதான் என்கிறார்

No comments:

Post a Comment