திராவிட மாடல் அரசின் சாதனைகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 4, 2023

திராவிட மாடல் அரசின் சாதனைகள்!

 தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில்   ரூ.15லு கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் 

முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, ஜன. 4- தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ.15லு கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தமிழ் நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழ் நாடு அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த மேலக்கோட் டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் 7 கோடி ரூபாய் செலவில் 400 மீட்டர் செயற்கையிழை ஓடுதளம், 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் பல்நோக்கு ஜிம்னா ஷியம் மற்றும் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஆசிரியர் களுக்கான குடியிருப்புகள் என மொத்தம் 15 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. முதலமைச்சர் திறந்து வைத்தார். 

இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலை மைச் செயலாளர் வெ.இறை யன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்தி கேயன், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment