நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதா? - மம்தா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதா? - மம்தா குற்றச்சாட்டு


கொல்கத்தா, ஜன. 18- நீதிமன்றங்களின் செயல்பாட்டில் ஒன்றிய அரசு தலையிட முயற்சி செய்வதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். உயர்மட்ட நீதித் துறையில் நீதிபதிகளை நியமிக்கும் நடவடிக்கையை கொலீஜியம் அமைப்பு மேற்கொள்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட்டுக்கு ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுதியுள்ள கடிதத்தில், கொலீஜியம் அமைப் பில் அரசு நியமன உறுப்பினர்களை நியமிப்பதற்கான முன்மொழிவை தெரிவித்துள்ளார். அதற்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இது ஒரு புதிய வகையான திட்டமிடலாகும். உச்சநீதிமன்றத் தின் கொலீஜியத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதித்துவம் இருந்தால், இயல்பாகவே மாநில அரசுகளும் தங்கள் பிரதிநிதிகளை கொலீஜியத்தில் சேர்க்கும். 
ஆனால் மாநில அரசுகளின் பரிந் துரைக்கு எந்த மதிப்பும் இருக்காது. கடைசியில், நீதித்துறை செயல்பாட்டில் ஒன்றிய அரசு தான் நேரடியாக தலையிடுவதாக இருக்கும். அதை நாங்கள் விரும்ப வில்லை. நீதித்துறை சுதந்திரமாகவே செயல்படுவதையே நாங்கள் விரும்புகிறோம்.' என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment