அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்: ரிசர்வ் வங்கி எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்: ரிசர்வ் வங்கி எதிர்ப்பு

புதுடில்லி, ஜன. 18- பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்துவது மாநிலங்களுக்கு ஆபத்து என ரிசர்வ் வங்கி எச்சரித் துள்ளது.அரசு ஊழியர் கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நெடுநாட்களாக போராடி வருகின்றனர். சில மாநிலங்கள் மட்டும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து வதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், பழைய ஓய் வூதிய திட்டத்தை மீண் டும் அமல்படுத்துவதால் மாநிலங்களின் நிதிநிலை கடுமையாக பாதிக்கப் படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந் தது. பிறகு, 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு தேசிய பென்சன் திட்டம் (ழிறிஷி) கொண்டுவரப்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத் தில் கிடைத்த நிலையான ஓய்வூதியமும், பல்வேறு சலுகைகளும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் கிடைப்பதில்லை என அரசு ஊழியர்கள் கூறு கின்றனர். எனவே, மீண் டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஏற் கெனவே ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங் கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து வதாக அறிவித்துள்ளன. இந்த வரிசையில் தற் போது இமாசலப் பிரதே சமும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி யுள்ளது. தமிழ்நாட்டி லும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற குரல் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங் களின் நிதிநிலை குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சில மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து வதால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள் ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து வதால் ஏற்படும் சேமிப்பு கள் குறுகிய கால அடிப்படையிலானது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இப்போதைய செலவு களை எதிர்காலத்துக்கு தள்ளிப்போடுவதால், வரும் ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ஓய்வூதியச் சுமை அதிகரிக் கும் அபாயம் இருப்பதா கவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்து வதற்கு ஒன்றிய அரசுக்கு திட்டம் இருக்கிறதா என அண்மையில் நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அரசு அளித்த பதிலில், பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்துவ தற்கு எந்த திட்டமும் இல்லை என தெரிவித்துவிட்டது.

No comments:

Post a Comment