தி.மு.க.வினர்மீது பாய்ந்த சட்டம் பா.ஜ.க. குற்றவாளிகளை விட்டு வைப்பது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 5, 2023

தி.மு.க.வினர்மீது பாய்ந்த சட்டம் பா.ஜ.க. குற்றவாளிகளை விட்டு வைப்பது ஏன்?

சட்டம் பாய வேண்டாமா?

தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மகளிர் காவல் பணியாளரிடம் தவறாக நடந்து கொண்டனர் இரு தி.மு.க. இளைஞர்கள் என்ற குற்றச்சாற்றைக் கூறி, பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை, மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ,.  ஆகியோர் செய்தியாளர் பேட்டி, அறிக்கைகள் கொடுத்துள்ளனர்.

அதற்கு முன்பே தி.மு.க. தலைமை அத் தி.மு.க.வினரை கட்சியிலிருந்து நீக்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுத் துள்ளது. அவர்கள்மீது கிரிமினல் குற்ற வழக்கும் போட்டு கைது செய்துள்ளது தி.மு.க. அரசு.

அதேநேரத்தில், பா.ஜ.க.விலிருந்து விலகிய திருமதி காயத்திரி ரகுராம் என்ற பெண்மணி, பா.ஜ.க. தலைமை நிலையத்தில் - கமலாலயத்தில் மகளிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று நீண்ட அறிக்கை தந்துள்ளார்!

ஏற்கெனவே, அக்கட்சிப் பொறுப்பாளர் ராகவன் என்பவர்மீது பாலியல் குற்றச்சாற்றுகள் ஏராளம் வந்தன. தொடர்ந்த ஆபாச வசை மாரி, பெண்களை இழிவுபடுத்தியது - இத்தனைக்கும் பொறுப்பான, பா.ஜ.க. பொறுப்பாளர்கள்மீது ஏன் சட்டம் பாயவில்லை - இன்னமும்? 

நடிகர் ஒருவர் ஊடகங்களில் பணியாற்றும் பெண்களைக் கொச்சையாக விமர்சித்தார்; அந்த நடிகர்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லையே!

தி.மு.க.வினர்மீது பாய்ந்த சட்டம், பா.ஜ.க.வினர்மீது, பாய்ந்து கைது நடவடிக்கைகள் எடுக்க என்ன தயக்கம்?

சட்டம் சரியாக தன் கடமையைச் செய்யவேண்டாமா?

No comments:

Post a Comment