என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 24, 2023

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

சிதம்பரம், ஜன. 24- என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். கடலூர்நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கரிவெட்டி, கத்தாழை ஆகிய கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர்கள், 

விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் சிதம்பரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (23.1.2023) நடந்தது. கூட்டத்திற்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் (சுரங்கம்) சுரேஷ் சந்திர சுமந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலைவாய்ப்பில் ஆயிரம் பேருக்கும், அய்.டி.அய்., டிப்ளமோ படித்த 560 பேருக்கும் வேலை வழங்கி 3 ஆண்டுகாலம் பயிற்சி கொடுத்து மாத சம்பளத்தில் வேலை நிரந்தரம் செய்யப்படும் என்றார். இதனை ஏற்ற கரிவெட்டி, கத்தாழை கிராமத்தின் நில உரிமையாளர்கள் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நிலம் எடுப்பதற்கு தங்களின் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.

மேலும் இக்கூட்டத்தில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத் திற்கு நிலம் கொடுத்தவர்களில் 10 பேருக்கு என்.எல்.சி. நிறுவன பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். இதில் என்.எல்.சி. மனிதவளத்துறை இயக்குநர் சதீஷ் பாபு, நில எடுப்பு துறை செயல் இயக்குனர் ஜாஸ்பர் ரோஸ், முதன்மை பொதுமேலாளர் விவேகானந்தன், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சக்தி கணேசன், சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) முத்துமாரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment