காப்பியடிப்பதிலும், மோசடி செய்வதிலும் ‘டாக்டரேட்’ வாங்கியவன் நான்! மாணவர்களிடம் பெருமையுடன் கூறிய கருநாடக பாஜக அமைச்சர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 14, 2022

காப்பியடிப்பதிலும், மோசடி செய்வதிலும் ‘டாக்டரேட்’ வாங்கியவன் நான்! மாணவர்களிடம் பெருமையுடன் கூறிய கருநாடக பாஜக அமைச்சர்!

பெங்களூரு, டிச. 14- மாணவர் களுக்கான நிகழ்ச்சி ஒன் றில் பேசிய கருநாடக மாநில பாஜக அமைச்சர் ஸ்ரீராமுலு, நான் காப்பி யடிப்பதிலும், மோசடி செய்வதிலும் ‘டாக்ட ரேட்’ வாங்கியவன் என கூறியது பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது. ஒழுக் கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஒரு மாநில அமைச்சர் இவ் வாறு பேசியிருப்பது கடு மையான விமர்சனங்களை ஏற் படுத்தி உள்ளது

கர்நாடகாவின் பெல் லாரி மாவட்டத்தில், 10ஆ-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதை விளக்கி, கருநாடகாவின் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் பி.சிறீ ராமுலு மாணவர்களி டையே உரையாற்றினார்.  தான் படிக்கும் காலத்தில்,  “வகுப்பறையில் எல் லோர் முன்னிலையிலும் நான் அவமானப்படுத்தப் பட் டேன். ஒன்பதாம் வகுப்பு வரை எப்படி தேர்ச்சி பெற்றாய் என ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நான் காப்பி அடித்துத்தான் தேர்ச்சி பெற்றேன் எனத் தெரிவித்தேன். பத்தாம் வகுப்புத் தேர்வில் நான் காப்பி அடித்துத்தான் தேர்வானேன். நான் காப்பி அடிப்பதில் பிஎச்டி முடித்தவன்” என்றும் பேசியதுடன்,  மோசடி செய்வதில் பி.எச்.டி. வாங் கியவன் என தனது மோச டியை பெருமையாக எண்ணி பேசி மகிழ்ந்தார்.அவரது பேச்சு தொடர் பான காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. மாணவர்களுக்கு நல்போதனைகளை கூற வேண்டிய அமைச்சரே, நான் காப்பியடித்துதான் தேர்வானேன் என்று பேசி யிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடு மையான கண்டனங்கள் குவிந்து வருகிறது. காங்கி ரஸ் தலைவரும், 

கர்நாடக சட்டப்பேர வையின் மேனாள் சட் டப் பேரவை தலைவரு மான கே.ஆர்.ரமேஷ் குமா ருக்கு, மேனாள் கருநாடக முத லமைச்சர் எச்.டி. குமாரசாமி, நாடாளுமன் றத்தில் அல்லாத மொழி யைப் பயன்படுத்தியதற் காக கோபமடைந்த சில நாட் களுக்குப் பிறகு இவ ரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது..


No comments:

Post a Comment