'தினமலர்' பூனைக்குட்டி வெளியில் வந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 27, 2022

'தினமலர்' பூனைக்குட்டி வெளியில் வந்தது

25.12.2022 - 'தினமலர்' ஏட்டில் பக்கம் 8இல் ஒரு கடிதம் "தன்னைப் பற்றி விமர்சித்து எழுதவே 'தினமலர்' நாளிதழ் உள்ளது - என  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புலம்பி உள்ளார். இவர் மட்டும் என்னவாம்.. பிராமணர்களை விமர்சிப்பது தானே இவரது வேலை" என்று எழுதியுள்ளது.

இதன் மூலம் தெரிவது என்ன? 'பிராமணர்களை'ப் பற்றி சொன்னால், அதற்காகவென்று 'தினமலர்' தினவெடுத்து எழுதினால் - அதன்படி 'தினமலர்' பிராமணர்களுக்காக வாதாடும் ஏடே" என்று ஒப்புக் கொண்டு விட்டதே!  ஆக 'தினமலர்' என்னும் பூணூல் பூனைக் குட்டி வெளி வந்து விட்டது. 'தினமல'ரை வாங்கும் பார்ப்பனர் அல்லாதார்கள் சிந்திப்பார்களாக!

No comments:

Post a Comment