செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 20, 2022

செய்திச் சுருக்கம்

தனியாருக்கு....

அடுத்த மூன்று ஆண்டுகளில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய தமிழ்நாட்டின் முக்கியமான நான்கு விமான நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் 25 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட ஒன்றிய பா.ஜ.க. அரசு முடிவு.

அதிகநிதி

இந்தியாவிலேயே பள்ளிக் கல்வித் துறைக்காக அதிக நிதி ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடுதான் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.

‘உழவன்'

விவசாயிகளின் நலன் கருதி வடிவமைக்கப்பட்ட ‘உழவன்' செயலியை இதுவரை 12.70 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்.

திருக்குறள்

2022-2023ஆம் ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithurai.tn.gov.in. என்ற வலைதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். 

உத்தரவு

அதிக எண்ணிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி, அரசின் திட்டங்கள் முழுவதும் மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமங்களில் செயல்படும் சுய உதவிக் குழுக்களையும் சென்றடையும் வண்ணம் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு இளைஞர் நலனுக்கான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு.

திருவிழா

இந்திய நாட்டிய திருவிழா மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகம் மற்றும் தீவுத்திடலில் வரும் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்.


No comments:

Post a Comment