செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 12, 2022

செய்திச் சுருக்கம்

வேலைக்கு...

சென்னையில் அஞ்சல் துறையில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ‘மெயில் மோட்டார்' சேவையில் திறமையான கைவினைஞர் பணிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை அறிவிப்பு.

அகற்றம்

மாண்டஸ் புயல் தாக்கத்தால் கடந்த 2 நாள்களில் மட்டும் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் என 644 மெட்ரிக் டன் அளவு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தகவல்.

புத்தகம்

புயல் மற்றும் கனமழையால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர் - மாணவியரின் பாடநூல்கள், கல்வி உபகரணங்கள் ஏதாவது சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதியதாக அந்த பொருள்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை அறிவிப்பு.

விடுவிப்பு

பிரதமர் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாட்டிற்கு முதல் தவணையாக ரூ.261.19 கோடியை ஒன்றிய அரசு விடுவித்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஊக்கத்தொகை

சர்க்கரை ஆலைகளுக்கு 2001-2022ஆம் ஆண் டிற்கான அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத் தொகை விரைவில் வழங்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

சுவர்கள்

புயல் போன்ற பேரிடர் காலங்களில், மீனவ கிராமங் களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தூண்டில் வளைவு, மதில் மற்றும் குறுக்கு சுவர்கள் அமைக்கப்படும் என மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தகவல்.

வருத்தம்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் அரசும், நீதித்துறையும் கால வரையறையை கடைப் பிடிக்காதது வருத்தம் அளிக்கிறது என நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment