கடவுளை மீட்கும் பக்தர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 7, 2022

கடவுளை மீட்கும் பக்தர்கள்

சேலம்,டிச.7- கடந்த 10 ஆண்டுகளில், 236 சிவ லிங்கங்களை "சுக பிரம்ம ரிஷி குழு" என்கிற பெயரில் பக்தர்கள் சிலர்  மீட்டுள்ளனராம்.  இது குறித்து அந்த குழுவை சேர்ந்த செந்தில்குமார், சாமிநாதன் கூறியதாவது: "நம் மூதாதையர், சிவ லிங்க  வழிபாட்டின் முக்கியத்துவம் கருதி தினமும் ஆறுகால பூஜை, புஷ்ப அலங்காரம் என பல்வேறு வழிபாடுகளை செய்து வந்தனர். 

ஆனால், தமிழ்நாட்டில் பல இடங்களில் சிவலிங்கங்கள் புதைந்தும், சிதைந்தும் உள்ளன. லிங்கத்தை மீட்கவும், அங்குள்ள கோவில்களை சீரமைக்கவும் முடிவு செய்த சிவ பக்தர்களால், சேலம் 'சுக பிரம்ம ரிஷி குழு' ஏற்படுத்தப்பட்டது. இதில், 30 பேர் உள்ளனர். புதர் மண்டியுள்ள லிங்கங்களை மீட்டு பூஜை செய்வது என, எங்களால் முடிந்தவரை புனரமைப்பு பணி செய்கிறோம். அதன்படி, சேலம், திருச்சி, செஞ்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட் டங்களில் இதுவரை, 236 சிவலிங்கங்களை மீட்டு பூஜைக்கு வைத்துள்ளோம்."

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இக்கட்டுகளிலிருந்து பக்தர்களை கடவுள் காப் பாற்றுவார் என்று பக்தர்கள் கூறிவரும் நிலையில், கடவுளர்களை பக்தர்கள் மீட்டு பூஜை செய்வது கேலிக் கூத்தல்லவா! 

கடவுளை நம்பியவரின் கெதி?

கோவிலில் வழிபடும் போதே மாரடைப்பில் உயிரிழந்த பக்தர்

கட்னி,டிச.7- மத்தியப் பிரதேசத்தில் கோவிலில் வழிபட்டு கொண்டிருந்தபோதே, பக்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மேஹானி. மருந்து கடை வைத்திருந்த இவர், ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தராம். வியாழன் தோறும் சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். கடந்த 1ஆம் தேதி ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு வந்தார். அங்கு சாய் பாபாவின் பாதங்களை பக்தர்கள் தலை வைத்து வணங்குவது வழக்கம். 

ராஜேஷ் மேஹானி முழங்காலிட்டு அமர்ந்து, பாபாவின் பாதங்களில் தலையை வைத்து வணங்கினார்; 15 நிமிடங்கள் வரை ஆகியும் அவர் எழவில்லை. பின்னால் காத்திருந்த பக்தர்கள் அவரை தட்டி எழுப்பினர். 

ஆனால் அவர் எழாததை அடுத்து கோவில் நிர்வாகத்தினரை அழைத்தனர். அவர்கள் வந்து ராஜேஷை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் தூக்கிச் சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

கடவுளை நம்பியவர் வழிபாடு செய்து கொண்டி ருந்த நிலையில் 'இப்படி ஆகி விட்டதே' என்று பக்தர்கள் வருத்தமுடன் கூறினர். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.


உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் சோப்தார்

மதுரை, டிச.7 மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முதல் முதலாக சோப்தார் பணியில் பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் ஆண்கள் மட்டுமே சோப்தார் பணியில் இருந்து வரும் நிலையில் முதல் முறையாக மதுரை உயர்நீதிமன்றத்தில் பெண் சோப்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி அருகே செங்கோல் ஏந்தி நிற்கும் சோப்தார்பணியில் ஆண்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில் சோப்தார்  சீருடையில் பெண் நியமனம் செய்து இருப்பது  வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை உச்சநீதிமன்ற கிளையில் சோப்தார் பணியில் லலிதா என்பவர் நியமிக்கப் பட்டுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment