விழுப்புரம் மண்டல மேனாள் தலைவர் கா.மு.தாஸ் முதலாண்டு நினைவேந்தல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

விழுப்புரம் மண்டல மேனாள் தலைவர் கா.மு.தாஸ் முதலாண்டு நினைவேந்தல் கூட்டம்

திண்டிவனம், டிச. 4- விழுப்புரம் மண்டல திராவிடர் கழக மேனாள் தலைவர் கா.மு தாஸ் முதலாண்டு நினைவேந்தல் கூட்டம் அவருடைய இல்ல வளா கத்தில் 1.12.2022 காலை 11 மணி முதல் ஒரு மணி வரை திண்டிவனம் நகர தலைவர் பச்சையப் பன் தலைமையில் திண்டிவனம் மாவட்ட தலைவர் அன்பழகன் மாவட்ட செயலாளர் பரந்தாமன் விழுப்புரம் மாவட்ட தலைவர் சுப்பராயன் விழுப்புரம் நகர செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. 

மண்டல செயலாளர் இளம் பரிதி தாஸ் வரவேற்புரை ஆற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் பெரியார் தொண்டர்களின் அருமை பெருமை களை விளக்கி யும் தாஸ் அவர்களின் கொள்கை உறுதிப்பாட்டையும் துணிவையும் ஆற்றிய பங்கு பணி களையும் விளக்கி நினைவு உரையாற் றினார். மற்றும் புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி, பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலாளர் நவா. ஏழுமலை, விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் கோபண்ணா, விழுப்பு ரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் துரை.திருநாவுக்கரசு, திண் டிவனம் நகர அமைப்பாளர் வில்லவன், கோதை ஒலக்கூர் ஒன்றிய தலைவர் பெருமாள், திண்டிவனம் நகர செயலா ளர் பன்னீர்செல்வம், திண்டிவனம் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் ரமேஷ், மயிலம் ஒன்றிய செயலாளர் அன்புக்கரசன், விழுப் புரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ், ஒலக்கூர் ஒன்றிய அமைப்பாளர் ராஜா ராம், வானூர் ஒன்றிய இளைஞ ரணி தலைவர் அன்பரசன், திண்டிவனம் மாவட்ட மாணவர் அணி செயலாளர் பிரகாஷ், கடலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட் டல் ராமநாதன், சுடரொளி சுந்தரம் புதுச்சேரி இளைஞர் அணி தலைவர் ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பழனி தாஸ் அவர்களின் வாழ்விணையர் விஜயலட் சுமி, மகள்கள் தமிழரசி முருகப் பன், கண்மணி ஜெகன், முத்தா ரம் மணிமாறன், மருமகள்கள் நிவேதா, தேன்மொழி மற்றும் உறவினர்கள் தோழர்கள் திரளாக பங்கேற்றனர். முடிவில் தம்பி பிரபாகரன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment