உச்சநீதிமன்ற வரலாற்றில் ஒரு புதுமை பெண் நீதிபதிகள் முழு அமர்வு தலைமை நீதிபதியின் புரட்சி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

உச்சநீதிமன்ற வரலாற்றில் ஒரு புதுமை பெண் நீதிபதிகள் முழு அமர்வு தலைமை நீதிபதியின் புரட்சி!

புதுடில்லி. டிச. 4- உச்சநீதிமன் றத்தில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரித்தது. 

உச்ச நீதி மன்ற வரலாற்றில் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங் கிய அமர்வு வருவது இது மூன்றாவது முறையாகும். நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமைத்தார்.

திருமணத் தகராறு மற்றும் பிணை மனு உள் ளிட்ட 32 வழக்குகள் இந்த நீதிபதிகள் அமர்வு முன் பட்டியலிடப் பட்டிருந்தன. 

இதற்கு முன், 2013 மற்றும் 2018 இல், பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு இருந்தது. 2013 இல் நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய பெஞ்சில் இருந்த னர். 2018இல், நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகி யோர் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வில் உறுப்பினர்க ளாக இருந்தனர். உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதி கள் தேவை. ஆனால் தற்போது 27 நீதிபதிகளே உள்ளனர். உச்சநீதிமன் றத்தில் தற்போது நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி, நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய மூன்று பெண் நீதி பதிகள் உள்ளனர்.

No comments:

Post a Comment