திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த 2.12.2022 அன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களான தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை,ச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய செயலாளர் பேராசிரியர் காதர் மொய்தீன், தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப் பிரிவு செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா ஆகியோருக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசினை வழங்கினர்.
தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள்: சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு!