ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 6, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

 மோடி அரசின் தனியார்மயமாக்கல் கொள்கை ஒரு சில பணக்காரர்களுக்கு மட்டுமே உதவும் என ராகுல் பேச்சு.

 எரிமலையோடு விளையாடாதீர், ஆளுநர்களின் கருத்து குறித்து முரசொலி எச்சரிக்கை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 உயர்ஜாதி அரிய வகை ஏழைகள் வழக்கில் நாளை (7.11.2022) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லலித் மற்றும் நீதிபதி பட் ஆகியோர் தீர்ப்பு அளிக்க உள்ளனர்.

 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் விவரங்கள் ஹிந்தியிலும் நிறுவிட ஒன்றிய அரசு அறிவுறுத்தல். கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கடும் எதிர்ப்பு.

 டைம்ஸ் ஆப் இந்தியா:

 தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒரு போதும் ஏற்காது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திட்டவட்டம்.

தி டெலிகிராப்:

 ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து நரேந்திர மோடி பிரதமரானார் என்றும், ஆனால் அவர் காலிப் பணியிடங்களை வழங்கியுள்ளார் என்றும், நாடு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய நெருக் கடியைச் சமாளிக்க அவரது உறுதியற்ற தன்மையைக்  காட்டுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சாடல்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment