ராஜீவ் காந்தி கொலை வழக்கு: எஞ்சிய ஆறு பேர் விடுதலை ஆளுநர் பதவி விலகுவாரா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: எஞ்சிய ஆறு பேர் விடுதலை ஆளுநர் பதவி விலகுவாரா?

தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து

தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நிலைப் பாட்டிற்கு விரோதமாக பேரறிவாளன் விடுதலை -  நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி, உச்சநீதிமன்றம் விடுதலை செய் துள்ளதை வரவேற்கிறோம்.

ஏற்கெனவே தந்த தீர்ப்பையொட்டி, உச்சநீதிமன்றம் இதனைத் தந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது -சட்டப் பிழை என்பதற்கான சான்றே இந்தத் தீர்ப்பு!

உச்சநீதிமன்றத்தின் இந்த இரண்டு ‘குட்டு'கள் போன்ற நடவடிக்கைக்குப் பிறகாவது தமிழ்நாடு ஆளுநர், பதவி விலகுவாரா? என்பதுதான் இப் போதுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்!

இனியாவது அரசமைப்புச் சட்டக் கடமையிலிருந்து (161 ஆவது பிரிவின்படி) தவறாமல் நடக்கவேண்டும் ஆளுநர்கள்

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

11.11.2022


No comments:

Post a Comment