அய்.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 17, 2022

அய்.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம்

நியூயார்க், நவ. 17- உக்ரைன் விவ காரத்தில் பன்னாட்டு சட்ட விதிகளை மீறிய புகாரின்மீது அய்.நா. பொதுசபை கூட்டத்தில்  வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த தீர்மானம் தொடர் பான வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 73 நாடுகள் பங்கேற்க வில்லை.

கடந்த பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 9 மாதங்களாக போர் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் உக்ரைன் விவ காரத்தில் ரஷ்யா பன்னாட்டு சட்ட விதிகளை மீறி செயல் பட்டிருப்பதாக குற்றம்சாட்டி அய்.நா. பொது சபை கூட்டத்தில் 14.11.2022 அன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெ ரிக்கா உட்பட 50 நாடுகள் சார்பில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

தீர்மானம் மீதான விவாதத் தில் உக்ரைன் தூதர் செர்ஜி கெட்ஸ் லெட்லியா கூறும் போது, “சுமார் 77 ஆண்டுகளுக்கு முன்பு போரினால் பாதிக்கப் பட்ட ரஷ்யா, அய்.நா. சபையில் முறையிட்டு நிவாரண தொகையை பெற்றது. தற்போது அந்த நாடு பன்னாட்டு சட்ட விதிகளை மீறி உக்ரைனை ஆக் கிரமித்து தாக்குதல் நடத்தி வரு கிறது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

கோடிக்கணக்கான மதிப் புள்ள சொத்துகள் சேதமடைந்து உள்ளன. இதற்கு ரஷ்யா இழப் பீடு அளிக்க வேண்டும். போர்க் குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். அந்த நாட்டுக்கு உரிய தண்டனை வழங்க வேண் டும்" என்று தெரிவித்தார்.

ரஷ்ய தூதர் வாசிலி நிபென் ஜியா கூறும்போது, “அய்.நா. சபை என்பது நீதிமன்றம் கிடை யாது. நீதிமன்றத்தில் முறையிடுவது போன்று சில நாடுகள் தீர்மானத்தை கொண்டு வந்துள் ளன. பன்னாட்டு சட்ட விதி களை மீறி செயல்படும் நாடுகள் எங்கள் மீது குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது. உலகம் முழுவதும் ரஷ்யாவுக்கு சொந்த மான சொத்துகள், வங்கிக் கணக் குகள் முடக்கப்பட்டு உள்ளன. ரஷ்யாவின் பணத்தின் மூலம் மேற்கத்திய நாடுகள் உக்ரை னுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இது பன்னாட்டு சட்டவிதிமீறல்’’ என்று குற்றம் சாட்டினார்.

இறுதியில் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

அமெரிக்கா, பிரிட்டன் உட் பட 94 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 

சீனா, பெலாரஸ், வடகொரியா, ஈரான், ரஷ்யா, சிரியா உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

இந்தியா உள்ளிட்ட 73 நாடு கள் வாக்கெடுப்பில் பங்கேற்க வில்லை. பெரும்பான்மை வாக்கு களின் அடிப்படையில் தீர்மா னம்  நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment