செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

செய்தியும், சிந்தனையும்....!

மித்திர பே(வ)தம்!

* ‘ஹிந்தி படிக்கலாம்' சொல்கிறார் பொன்முடி.

- ‘தினமலர்', 8.11.2022

>> விருப்பப்பட்டவர்கள் ஹிந்தி படிக்கலாம் என்று ‘தினமலர்' செய்திக்குள் இருக்கிறது. தலைப்போ ஹிந்தி படிக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி சொன்னதாக உள்ளது.

இரண்டுக்கும் வேறுபாடு இல்லையா, ஹிந்தி மொழி என்ன எந்த மொழியையும் படிக்கலாம் - கற்கலாம் - யார் தடை போட்டது?

‘தினமலருக்கு' ஏனிந்த ‘உள்ளடி வேலை?

ஓ, அவர்களின் புத்தியே மித்திரபேதம் செய்யும் பூணூல்தானே!

கல்லுக்குக் கல்லு!

* ராமன் கோவிலை அயோத்தியில் கட்டி முடிக்க நில நடுக்கத்தைத் தாங்கும் சக்தி வாய்ந்த கிரானைட் கற்கள். 

>> ஏன் ராமன் சக்திமீது நம்பிக்கை இல்லையோ!

No comments:

Post a Comment