ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தனது கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தனது கட்சியின் கூற்றுக்கு ஆதரவாக தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் தொடர் காட்சிப்பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

* கார்ப்பரேட் நிறுவனங்களை எந்தவித கட்டுப் பாடும் இல்லாமல் விட்டால், பொருளாதார சீரழிவு ஏற்படும் என்பதற்கு ஜப்பான் ஒரு முன்னுதாரணம் என பத்திரிகையாளர் பர்சா வெங்கடேஷ்வர ராவ் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

தி ஹிந்து:

* நாடாளுமன்ற உள்துறை குழுவின் விவாதத்தில் இருந்து 'ஒன்றிய-மாநில உறவுகளை' நீக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 50 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆளுநர் திடீர் டில்லி பயணம்.

தி டெலிகிராப்:

* பீகார் போன்ற மிகவும் பின்தங்கிய மாநிலத்திற்கு 'சிறப்பு வகை தகுதி' வழங்காத ஒன்றிய அரசுக்கு நிதிஷ் குமார் கண்டனம்.

- குடந்தை கருணா 


No comments:

Post a Comment