வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறை புதிய தலைமை நீதிபதி உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 11, 2022

வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறை புதிய தலைமை நீதிபதி உத்தரவு

புதுடில்லி,நவ.11- உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் புதிய வழக்குகளை குறிப்பிட்ட கிழமைகளில் பட்டியலிடும் புதிய நடை முறையை செயல்படுத்தும்படி நேற்று (10.11.2022) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் ரிட், மேல்முறையீடு, இடையீட்டு மனு மற்றும் பொதுநல வழக் குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்ற பதிவாளர் முதலில் பரிசீலிப்பார். இதைத் தொடர்ந்து, அம்மனுவில் பிழை ஏதும் இல்லாத பட்சத்தில், தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அந்த மனுக்களை பரிசீலிக்கும் தலைமை நீதிபதி, அம்மனுக் களை உரிய அமர்வில் பட்டியலிடுமாறு உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு பிறப் பிப்பார்.

இதுபோன்ற நடைமுறைகள் காலதாமத மாகும் பட்சத்தில், தங்களது மனுவை அவசரமாக எடுத்து விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகும் வழக் குரைஞர்கள், தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுப்பது நடைமுறை யில் இருந்து வருகிறது. இந்நிலை யில், நேற்று உச்சநீதி மன்ற தலைமை நீதி பதி சந்திர சூட் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், உச்சநீதி மன்றத்தில் திங்கள், செவ்வாய், சனிக்கிழமை களில் பதிவு செய்யப் படும் அனைத்து வழக்கு களும், அடுத்த திங் கள் கிழமை விசார ணைக்கு பட்டியலிடப்படும்.

அதேபோல் வியாழன் மற்றும் வெள் ளிக்கிழமைகளில் பதிவு செய்யப்படும் வழக்குகள் அனைத்தும் மறுவாரம் வெள் ளிக்கிழமை தானாகவே பட்டியலில் இடம்பெறும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற பதிவாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய நடைமுறை அறிவிப்பு, வழக்குகள் அனைத்தும் தாமதமின்றி பட்டியலிடப் படுவதை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment