சமூகஅநீதி தீர்ப்பு சரிசெய்யப்படவேண்டும்! எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

சமூகஅநீதி தீர்ப்பு சரிசெய்யப்படவேண்டும்! எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை,நவ.9- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப் பினர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளி யிட் டுள்ள அறிக்கை வருமாறு:

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்ட திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சமூக நீதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை நீதிக்கும் இது எதிரானது.

இந்த வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நான் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தேன். எங்கள் கட்சியின் சார்பில் மூத்த வழக்குரைஞரும் மேனாள் ஒன்றிய அமைச்சருமான சல்மான் குர்சித் இந்த வழக்கில் வாதிட்டார்.

இந்த தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்தின் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு தெளிவான தாக் குதலாகும். அரசமைப்புச் சட்டத்தை உரு வாக்கிய பிதாமகர்கள் உருவாக்கி அளித்த முறைமைகளை முற்றிலும் புறந்தள்ளி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு முற்பட்ட சமூகத்தினருக்கு அவர்கள் மக்கள் தொகை அளவை விட அதிகமாக இடஒதுக்கீடு பெற்றுத் தரும் அதேநேரத்தில் 'கிரீமிலேயர்' அடிப் படையில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ள பெரும்பாலும் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்ட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை வஞ்சித்து அவர்களது வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு இந்திரா சஹானி வழக்கில் இடஒதுக்கீடு வழக்கில் அளித்த தீர்ப்பில் உருவாக்கப்பட்ட முறைமைகளையும் அய்ந்து நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு புறந்தள்ளியுள்ளது.

எனவே மனிதநேய மக்கள் கட்சி இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும். இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண் டும் என்பதே தேசமக்களின் எதிர்பார்பாகும்.

-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.


குஜராத்  பாலம் விபத்து 

யாரும் மன்னிப்பு கேட்காதது  ஏன்?

ப.சிதம்பரம் கேள்வி

 புதுடெல்லி, நவ.9 மோர்பி தொங்கு பாலம் விபத்து குஜ ராத்தின் நியாயமான பெயருக்கு அவமானத்தை ஏற் படுத்தி யுள்ளது குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 135 பேர் பலியானார்கள். இந்நிகழ்வு தொடர்பாக குஜராத் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இந்த நிலையில் மோர்பி பாலம் விபத்து தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியதாவது:- மோர்பி தொங்கு பாலம் விபத்து குஜராத்தின் நியாயமான பெய ருக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர நிகழ்விற்கு அரசு சார்பில் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை என்பதுதான் மிகவும் அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு. பொறுப் பேற்று யாரும்  பதவியும் விலகவில்லை என தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment