தேவையற்ற கலோரிகளை ஆற்றலாக மாற்ற "ஸ்கிப்பிங்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 30, 2022

தேவையற்ற கலோரிகளை ஆற்றலாக மாற்ற "ஸ்கிப்பிங்"

ஒவ்வொரு மனிதனும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி மிகவும் உதவும் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர் 

அந்த வகையில் கலோரிகளை எரிக்க நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்பட பல வகைகள் உள்ளன. இந்த நிலையில் பத்தே நிமிடங் களில் உடலில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலோரிகளை எரிக்க ‘ஸ்கிப்பிங்' பயிற்சி செய்ய வேண்டும் என மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை ‘ஸ்கிப்பிங்' விளையாடுவதை வழக்க மாக கொண்டிருந்தனர் என்பதும் அதனால் அவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தார்கள் என்பதும் தெரிந் ததே - ஆனால் தற்போது ‘ஸ்கிப்பிங்' பயிற்சி என்பதை இந்த கால தலைமுறை கள் மறந்து விட்டனர். இதன் காரணமாக கலோரிகள் எரிக்கப்படாமல் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றனஇந்த நிலையில் ஒரு மணி நேரம் ‘ஸ்கிப்பிங்' பயிற்சி செய்தால் ஆயிரத்துக்கும் மேற் பட்ட கலோரிகளை எரிக்கலாம் என்றும் உடல் வலிமை அதிகரிக்கும் என்றும் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறையும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 

No comments:

Post a Comment