50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்குக! பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்குக! பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேட்டி

பாட்னா, நவ 9- 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பினை நீக்க வேண்டும் என்று பீகார் முதலமைச்சர்  நிதிஷ் குமார் குரல் கொடுத்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப் பினருக்கு. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல் லும் என்று உச்சநீதிமன் றம் தீர்ப்பு அளித்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற் படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக அய்க்கிய ஜனதாதளம் கட்சித்தலைவரும், பீகார் மாநில முதலமைச்சரு மான நிதிஷ்குமார், பாட் னாவில் நேற்று (8.11.2022) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது  அவர் 50 சதவீதம் என்ற இட ஒதுக்கீடு உச்ச வரம்பினை நீக்க வேண் டும் என்று கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- 

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு போதுமான அளவு நியா யமானதுதான். நாங்கள் எப்போதுமே இட ஒதுக் கீடுக்கு ஆதரவானவர்கள். ஆனால் 50 சதவீத இட ஒதுக்கீடு என்னும் உச்ச வரம்பை உயர்த்த வேண் டிய தருணம் வந்திருக்கி றது. இந்த உச்ச வரம்பா னது, இதர பிற்படுத்தப் பட்டோருக்கும் (ஓபிசி), மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (இபிசி) மக்கள் தொகை விகிதா சார அடிப்படையில் வாய்ப்புகளை இழக்கச் செய்கிறது.

தாழ்த்தப்பட்ட வகுப் பினருக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்பட்டி ருக்கிறது. ஆனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கும் (ஓபிசி), மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (இபிசி) அவ்வாறு அவர்களு டைய மக்கள்தொகைக் கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. இவ் விரு வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வசதி கிடைப்பதற்கு ஏதுவாக 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பினை உயர்த் தினால் நல்லது. பல்வேறு சமூகக்குழுக்களின் மக்கள் தொகை கணக் கெடுப்பை புதிதாக மேற் கொள்ள வேண்டும் என்று கடந்த ஆண்டு பிரச்சினையை பிரதமர் மோடியிடம் எடுத்துச் சென்றோம். ஆனால் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநி லங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறப் பட்டது. நாங்கள் அந்த கணக்கெடுப்பை நடத்தி இருக்கிறோம். ஆனால் இதை தேசிய அளவிலும் செய்ய வேண்டியது அவ சியம். சாதி அடிப்படை யில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்து வது பற்றி சிந்திக்க வேண் டும் என்று அவர் கூறி னார். 

No comments:

Post a Comment