காவலர் வேலையில் சேர்ந்த 3 சகோதரிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

காவலர் வேலையில் சேர்ந்த 3 சகோதரிகள்

அரக்கோணம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் காவல்துறையில் வேலையில் சேர்ந்து உள்ளனர். இவர்கள் தங்கள் விவசாய நிலத்தில் பயிற்சி பெற்று இந்த சாதனையை படைத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அன்வர் திகன்பேட்டை அருகே உள்ள கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா. இந்த இணையருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் குழந்தைகளாக இருந்தபோது தாய் ஷகிலா இறந்து விட்டார். வெங்க டேசன் 4 குழந்தைகளையும் விவசாய கூலி வேலை செய்து படிக்க வைத்தார். மூத்த மகள் பிரீத்தியை (வயது 27) பிளஸ்-2 வரை படிக்க வைத்து திரு மணம் செய்து வைத்துள்ளார். 2ஆவது மகள் வைஷ்ணவி (25) பி.ஏ. பட்டப் படிப்பும், மூன்றாவது மகள் நிரஞ்சனி (22) பி.எஸ்சி. பட்டப்படிப்பும் படிக்க வைத்துள்ளார். சகோதரிகள் 3 பேரும் காவல்துறை வேலையில் சேருவதற் காக பயிற்சி எடுத்து வந்தனர்.

அதன்படி அவர்கள் ராணிப் பேட்டை மாவட்டத்தில் நடந்த காவல் துறை தேர்வில் கலந்துகொண்டு 3 பேரும் தேர்வாகி உள்ளனர். அவர்கள் மூவரும் திருவள்ளூரில் உள்ள காவல் துறை பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெற்று வந்தனர். இதனைத்தொடர்ந்து பயிற்சி முடித்து தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்தனர். ஒரே குடும்பத்தில் இருந்து அக்காள், தங் கைகள் என மூவரும் ஒரே நேரத்தில் காவல்துறை பணிக்கு சேர்ந்ததால் குடும்பத்தில் உள்ளவர்களும், கிராம பொதுமக்களும் அவர்களுக்கு வாழ்த் துகளை தெரிவித்து வருகின்றனர்.

மகள்கள் காவல்துறை வேலையில் சேர்ந்தது குறித்து வெங்கடேசன் கூறிய தாவது:- "எனக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் விளைச்சல் இல்லாததால் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். இதனிடையே பிளஸ்-2 வரை படிக்க வைத்த முதல் மகள் பிரீத்தியை குடும்ப உறவில் ராஜீவ் காந்தி என்பவருக்குத் திரு மணம் செய்து வைத்தேன். அவர்க ளுக்கு 7 வயதிலும், 6 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர். 2ஆவது மகள் வைஷ்ணவி சென்னை வண் ணையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ.வும், 3ஆவது மகள் நிரஞ்சனி அரக்கோணம் அரசு கல்லூரி யில் பி.எஸ்சி.யும் படித்தனர். 

காவல்துறை வேலையில் சேர்ப்ப தற்காக 3 மகள்களுக்கும் எழுத்து தேர் வுக்கான பயிற்சி மற்றும் என்னுடைய நிலத்திலேயே நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைவதற்கான ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சி களை அவர்களுக்கு கொடுத்து வந் தேன். அதன் பயனாக இன்று 3 பேரும் காவல்துறை தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று பயிற்சியை முடித்து வேலையில் சேர்ந்துள்ளனர்.

நான் பிளஸ்-2 வரை படித்து காவல் துறை வேலையில் சேர முயற்சித்து கிடைக்காததால், எனது கனவினை நிறைவேற்றுவதற்காக பிள்ளைகளிடம் தாய் இல்லாததையும், குடும்ப சூழ் நிலையையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி கடினமாக பயிற்சி பெற தெரிவித்தேன். அதன்படி காவல்துறை வேலையில் சேர வேண்டும் என்ற எனது கனவினை எனது 3 மகள்களும் நிறைவேற்றியுள்ளனர். 

எனது மகனுக்கும் காவல்துறை வேலைக்காக பயிற்சி கொடுத்து வருகி றேன். அடுத்த மாதம் நடக்க இருக்கும் காவல்துறை தேர்விற்கு விண்ணப் பித்துள்ளார். அந்த தேர்வில் கலந்து கொண்டு என் மகன் நிச்சயம் தேர்ச்சி பெற்று காவல்துறை வேலையில் சேரு வான். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment