தமிழ்நாட்டில் காலணித் துறை 2030ஆம் ஆண்டுக்குள் 200 சதவிகித வளர்ச்சி அடையும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 4, 2022

தமிழ்நாட்டில் காலணித் துறை 2030ஆம் ஆண்டுக்குள் 200 சதவிகித வளர்ச்சி அடையும்

காலணித் தொழிற்சாலை கூட்டமைப்பின் தலைவர் தகவல்

கோயம்புத்தூர், நவ. 4- காலணி உற்பத்தித் துறையில் 2030 ஆம் ஆண்டிற்குள் 200 சதவிகித வளர்ச்சிக்கு தமிழ்நாடு தயாராக உள் ளதாக காலணித் தொழிற் சாலையின் கூட்­டமைப் பின் தலைவர் வி.நவுஷாத் தெரிவித்துள்ளார்.

இந்திய காலணி தொழிற்சாலைகளின் கூட்­டமைப்பின் தலை வர் வி.நவுஷாத் கூறியதா வது: 

இந்தியாவிடம், உலக ளாவிய காலணி ஏற்றுமதி சந்தையில் வெறும் 3 சதவிகித பங்கு மட்டுமே உள்ளது. இதில், தோல் அல்லாத காலணிகளின் பங்கு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே. உலகச் சந்தை யில் சீனாவும் வியட்நா மும் கணிசமான பங்கைக் கொண்டிருந்தன. இருப் பினும், சீனா பாதணிகள் மற்றும் மேற்கத்திய சந் தைகளில் கவனம் செலுத் துவதைக் குறைப்­பதன் மூலம், இந்திய உற்­பத்தியாளர்கள் சந்தை யில் தங்கள் பங்கைப் பெருக்குவதற்கான பெரும் ஆற்றலைக் கொண் டிருந்தனர் என்றார். 

உலகளாவிய காலணி களின் வருடாந்திர நுகர்வு 2200 கோடி ஜோடிகளைத் தாண்டும் நிலையில் 85 சதவிகிதம் தோல் அல்லாதவையா கும். இந்தியா ஆண்டுக்கு 200 கோடி ஜோடிகளை உருவாக்கும் நிலையில் தமிழ்நாட்டின் பங்கு தோராயமாக 10 சதவிகி தத்துக்கும் குறைவான தாக மதிப்பிடப்­பட்­டது.

தமிழ்நாடு அரசு சமீ பத்தில் காலணிக் கொள் கையை வெளியிட்­டது டன் வழிகாட்டுதலை வெளியிட்டு மாநிலத் திற்கு முதலீடுகளைக் கொண்டு வர முயற்சிக் கிறது. கிட்­டத்தட்ட ஆறு வெளிநாட்டு நிறுவனங் கள் மாநில அரசாங்கத் துடன் புரிந்துணர்வு ஒப்­பந்தத்தில் கையெழுத்திட்­டன. மூலப்பொருட்கள் மற்றும் காலணி உற்­பத்தி யில் முதலீடுகள் இதில் அடங்கும். பி வகை மாவட்டங்களில் அமைந் துள்ள சிப்காட் பகுதியில் மானிய விலையில் நிலம் மற்றும் பி மற்றும் சி வகை மாவட்டங்களில் உள்ள யூனிட்டுகளுக்கு 1.5 சத விகிதம் மற்றும் 1.75 சதவி கிதம் விற்­பனை அடிப்­படையிலான மானி யத்தை அரசு வழங்கியது.

ஒன்றிய அரசு ரூ.2,600 கோடி செலவில் பாதணி கள், காலணி மூலப் பொருட்கள், இயந்திரங் கள் மற்றும் அச்சுகளுக் கான உற்­பத்தியுடன் இணைக்கப்­பட்ட ஊக் கத் தொகை (பிஎல்அய்) திட்­டத்தையும் செயல்­படுத்தி வருகிறது. இந்த த் திட்டம் ரூ. 50 கோடி, ரூ.100 கோடி, ரூ.150 கோடி முதலீடுகளை எதிர்பார்த்து மூன்று மாதங்களில் தொடங்கப்­படும் என எதிர்பார்க்கப் பட்­டது. தற்போதுள்ள திறன்களை விரிவுபடுத் துதல் மற்றும் புதிய திறன் களை உருவாக்குதல் ஆகிய இரண்டிற்கும் யூனிட்களுக்கு ஊக்கத் தொகை கிடைக்கும் என்று வரைவுத் திட்­டம் கூறியுள்ளது.

பி.எல்.அய். திட்­டம் உலகளாவிய வாகையர் களை உருவாக்குவதாகும். தோல் அல்லாத காலணி துறையில் மூலப்பொருட் கள் கிடைப்­பது மற்றும் திறன் பயிற்சி ஆகிய இரண்டிலும் இந்தியா வளர்ச்சியடைய வேண் டும். பி.எல்.அய். திட்டத் தின் மூலம், ஏற்றுமதியில் இந்தியா தனது பங்கை ஏறக்குறைய 20 சதவிகிதம் ஆக அதிகரிக்க முடியும், என்றும் நவுஷாத் மேலும் குறிப்பிட்டார்.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஆதர வுடன், 2030ஆம் ஆண் டுக்குள் மாநிலத்தில் கால ணித் துறை கிட்­டத்தட்ட 200 சதவிகித வளர்ச்சி யைக் காணும் என்று நவுஷாத் கூறினார்.

No comments:

Post a Comment