தமிழ்நாட்டில் புதிதாக 139 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 139 பேருக்கு கரோனா பாதிப்பு

 சென்னை, நவ 3 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 139 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. 

 இது  பற்றிய தகவல்களை மருத்துவத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,92,326 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 35 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரு நாளில் மட்டும் 236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 35,52,883 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 38,048 ஆக உள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி தற்போது ஆயிரத்து 395 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் டில்லி : மோசமடைந்த காற்றின் தரம் - பொதுமக்கள் அவதி..!

புதுடில்லி, நவ.3 தலைநகர் டில்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. 

தலைநகர் டில்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனையும் மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டில்லி மாறியது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தலைநகர் டில்லி அதனை சுற்றியுள்ள என் சி ஆர் பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி டில்லியின் காற்றின் தரக் குறியீடு 364 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதாவது டில்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து 'மிகவும் மோசம்' என்ற நிலையில் நீடிக்கிறது. டில்லி விமானநிலைய பகுதியில் காற்றின் தரக் குறியீடு 333ஆக பதிவாகியுள்ளது. நொய்டாவில் 393ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 'மிகவும் மோசம்' என்ற நிலையை எட்டியது. குருகிராமில் 318 ஆக பதிவாகி 'மிகவும் மோசம்' என்ற நிலையில் நீடிக்கிறது. டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள என் சி ஆர் பகுதிகளில் பனிமூட்டம் மூடியுள்ளது போல காற்றுமாசு காரணமாக தூசி நிறைந்து காணப்படுகிறது. காற்று மாசு காரணமாக பனிமூட்டம் மூடியது போல காணப்படும் சாலைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக, காலையில் நடைப்பயிற்சி செய்பவர்கள், சைக்கிள் பயிற்சி செய்பவர்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாசு நிறைந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளதாக கவலை தெரிவித்தனர்.


No comments:

Post a Comment