கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வீட்டுவசதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வீட்டுவசதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை,நவ.16- தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடியில் வீட்டுவசதி வழங்கும் திட்டத்தை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழிலாளர் நலத்துறையின் கடந்த 2021-_2022ஆம் ஆண்டுக் கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழி லாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழி லாளர்களுக்கு அவர்கள் சொந் தமாக வீட்டுமனை வைத்திருந் தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ளநிதியுதவி வழங்கப்படும், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட் டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக் கும் திட்டம் அறிமுகப்படுத்தப் படும் என்று அறிவிக் கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், ஆண்டுதோறும் பதிவு பெற்ற 10 ஆயிரம் கட்டுமான தொழிலா ளர்களுக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரைவீட்டுவசதித் திட்ட நிதி உதவித்தொகை வழங்கும் வகை யில், ரூ.400 கோடி மதிப்பிலான திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.11.2022) தொடங்கி வைத் தார். அதன் அடையாளமாக, 5 கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்ட ஆணைகளை வழங்கினார்.

கடந்தாண்டு மே 7 முதல் இந்தாண்டு அக்.31ஆம் தேதி வரை வாரியத்தில் 4,27,176 பய னாளிகளுக்கு ரூ.322.79 கோடிக் கான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் வாரியத்தில் புதிதாக 7,71,666 தொழிலாளர் கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment