திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் ‘பெரியார் 1000 வினா - விடை போட்டி' தேர்வில் முதல் பரிசு பெற்ற மாணவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் ‘பெரியார் 1000 வினா - விடை போட்டி' தேர்வில் முதல் பரிசு பெற்ற மாணவர்

திருப்பத்தூர், நவ.9 பெரியார்  பல்கலைக் கழகம் நடத்திய பெரியார் 1000 வினா - விடை போட்டி தேர்வில் திருப்பத்தூர் மாவட்டம்  சார்பில் 17 பள்ளி களில் மொத்தம் 1461 மாணவ, மாணவிகள் பங்கு பெற்று தேர்வு எழுதினர். 

அதில் டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் அய். ஜுலன்  (+2 ) 50 மதிப்பெண்ணுக்கு 49 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதல் பரிசு பெற்றார். 

அவருக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கே. சி.எழிலரசன் வழங்கிய ரூ.5000 ரூபாயையும், பல்கலைக் கழகம் சார்பில் வழங்கிய மெடல்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 

இந் நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பெ. கலை வாணன், மண்டல இளைஞரணி செயலாளர் 

எ.சிற்றரசு, சோலையார்பேட்டை நகர செயலாளர் கோ.ராஜேந்திரன்,  மாவட்ட  தொழிலாரணி செய லாளர் க.மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment