கன்னியாகுமரியில் ‘பெரியார் 1000' பரிசளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 16, 2022

கன்னியாகுமரியில் ‘பெரியார் 1000' பரிசளிப்பு விழா

கன்னியாகுமரி, நவ.16  கன்னியாகுமரி  புனித அந் தோணியார் மேல் நிலைப்  பள்ளியில்  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்  சார்பாக  பெரியார் ஆயிரம் வினா விடைப்  போட்டி  நடந்தது.   இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவில்   பரிசு கள் வழங்கும் விழா அந்த பள்ளியில்     வைத்து  நடைபெற்றது   மாவட்ட கழகத் தலைவர் மா.மு சுப்பிரமணியம்,   தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். கழக ஒன்றிய செயலாளர் குமாரதாஸ்,  முன்னிலை  வகித்தா .

கழக மாவட்ட செயலாளர் கோ வெற்றி வேந் தன் விழாவினை ஒருங்கிணைத்து மாணவர் களுக்கு  பரிசுகள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை  கழக கன்னியாகுமரி கிளை அமைப்பாளர் க.யுவான்ஸ் செய்திருந்தார். இந்நிகழ்வில் ஏராள மான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 

வெற்றி பெற்ற மாணவ,  மாணவியருக்குப் பரிசு களாக மாவட்ட கழகம் சார்பாக பரிசுத் தொகை, பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன. பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்  சார்பாக மாணவர்களுக்கு  சான்றிதழ்கள், பதக்கங்கள், புத்த கங்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளுக்கு பெரியார் படம் வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment