ஹிந்துக் கடவுள்களை கிழித்தெறிகிறார் பா.ஜ.க. எம்.எல்.ஏ., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

ஹிந்துக் கடவுள்களை கிழித்தெறிகிறார் பா.ஜ.க. எம்.எல்.ஏ.,

பாட்னா,அக்.22- பீகார் மாநில சட்டமன்ற பா.ஜ.க. உறுப்பினர் லாலன் பாஸ்வான் 'லட்சு மியை வழிபடாத முஸ்லிம்களில், பணக் காரர்கள் இல்லையா' என்று கேள்வி எழுப் பியுள்ளார்.

பீகார் மாநிலத்தில் பிர்பய்ன்டி தொகுதி யின் சட்டமன்ற பா.ஜ.க. உறுப்பினர் லாலன் பாஸ்வான் கூறியதாவது:

ஹிந்துக் கடவுள் லட்சுமியை வழிபட் டால்தான் பணம் கொழிக்கும் என்கின்றனர். லட்சுமியை வழிபடாத முஸ்லிம்களில் பணக் காரர்கள் இல்லையா?அதுபோல சரஸ் வதியை வழிபடாத முஸ்லிம்களில் அறி வாளிகள், படித்தவர்கள் இல்லையா? முஸ் லிம், அய்.ஏ.எஸ்., - அய்.பி.எஸ்., அதிகாரிகள் இல்லையா?

ஆத்மா, பரமாத்மா என்பதெல்லாம் மக்கள் உருவாக்கிய கொள்கைகள். நீங்கள் நம்பினால், அது கடவுள்; இல்லாவிட்டால், அது வெறும் கற்சிலை தான். கடவுள்களை வழிபடலாமா, நம்பலாமா என்பது அவரவர் விருப்பம்.

இதை நம்புவதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் தேவை. கடவுள்களை நீங்கள் நம்ப மறுத்தால், உங்களுடைய அறிவு வளரும். 

-இவ்வாறு அவர் கூறினார்.

அவருடைய கருத்து சர்ச்சைக்குள்ளாக் கப்பட்டு, அவருடைய வீட்டின் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டனவாம்.

No comments:

Post a Comment