பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் தண்டர் விளையாட்டு கழகம் நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டி சிறப்புடன் நடந்தது.   தண்டர் விளையாட்டுக்கழகம், மற்றும் தண்டர் சிலம்பாட்டக் கழக நிறுவனர், பெரியார் வீரவிளையாட்டுக்கழக மாவட்டத் தலைவர், தீயணைப்பு மீட்பு பணிகள் துறையில் பணியாற்றக் கூடிய கராத்தே வீரர் தஞ்சை  தே. பொய்யாமொழி   ஒருங்கிணைப்பில்   தண்டர் சிட்டோரியு கராத்தே டூ. இந்தியா, தண்டர் விளையாட்டு கழகம், தஞ்சாவூர் டெல்டா ரோட்டரி சங்கம், பெரியார் வீர விளையாட்டுக்கழகம், பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 17- ஆம் ஆண்டு மாநில அளவிலான கராத்தே போட்டி (2022)  08-10-2022,   09-10-2022ஆகிய இரு நாட்கள் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்றது கராத்தே, சிலம்பம், யோகா உள்ளிட்ட போட்டி களில் மாநில அளவில் இருபால் மாணவர்கள் போட்டியில்  கலந்துகொண்டனர் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் கோப்பைகளும் பரிசாக வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.  சிறப்பு விருந்தினர்களுக்கு தண்டர் விளையாட்டுக்கழகம் சார்பில் நினைவு ப்பரிசுகள் வழங்கப்பட்டன 08-10-2022 அன்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் செ.வேலுசாமி, திரைப்பட இயக்குநர் இராசி.மணிவாசகன், கவிஞர்குமார், மல்லிகாராஜமாணிக்கம் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டுரை வழங்கினார்கள். இரண்டாம் நாள் நிகழ்வு: 09-10-2022 அன்று காலை 10 மணியளவில் கராத்தே, யோகாக்கலை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கவிழா நடைபெற்றன  தண்டர் விளையாட்டுக்கழக தலைமைப் பயிற்சியாளர் பா.எட்வின் இன்பராஜ் அனைவரையும் வரவேற்றார். திராவிடர்கழக மாவட்டத்தலைவர் சி.அமர்சிங் தலைமையுரை யாற்றினார். திராவிடர் கழக கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், த.மு.எ.பொறுப்பாளர் சாகுல்ஹமீது, மூத்த கராத்தே மாஸ்டர் சுகுமார், நிறுவனர் தே.பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையேற்று உரை யாற்றினார்கள். திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் கராத்தே போட்டியை தொடங்கி வைத்து உரையாற்றினார். தண்டர் விளையாட்டுக்கழக பயிற்றுநர் சென்செய்  லி.ஜாபர்சாதிக் நன்றி கூறினார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சந்துரு, மவட்ட இளைஞரணி அமைப்பாளர் இர.மணிகண்டன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் இர.மகேந்திரன், இர.நிலவன், தஞ்சை ஒன்றிய இளைஞரணி செயலாளர் இரமேஷ், அ. பெரியார் செல்வன், பேரா.இளவரசி, இ.பொ. பகுத்தறிவு உள்ளிட்ட பயிற்றுநர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்    தே.பொய்யாமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து : 09-10-2022 அன்று 51ஆவது பிறந்தநாள் காணும் கராத்தே தே.பொய்யாமொழிக்கு அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் ஆகியோர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் பல்கலைகழக உள்விளையாட்டு அரங்கை வழங்கிய ஆட்சி மன்ற உறுப்பினர் வீ.அன்புராஜுக்கு  நன்றி தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment