இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்தின் பெருந்தன்மை எங்கே- இந்தியாவின் சிறுமை எங்கே? தலைவர்களிடையே விவாதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்தின் பெருந்தன்மை எங்கே- இந்தியாவின் சிறுமை எங்கே? தலைவர்களிடையே விவாதம்

 புதுடில்லி, அக்.27 ரிஷி சுனக் இங் கிலாந்தின் பிரதமராக தேர்வானது குறித்து இந்திய அரசியலில் விவா தங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பாஜக மற்றும் எதிர்க்கட்சி தலை வர்களுக்கு இடையே வார்த்தைப் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பெரும் பான்மைவாதம் மற்றும் பிரிவினை வாதம் நிலவி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளும் பாஜக ஆட்சியை தாக்கி பேசுவதற்கு, இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக தேர்வான விஷயம் உதவியாக உள்ளது. பிரதமராக ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரி விக்கும் அதே வேளையில், பாஜக வை தாக்கியும் காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 'இந்தியா வில் எந்த சிறுபான்மையினரும் பிரதமராக முடியுமா' என்ற கேள்வியை அரசியல் தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் டுவிட்டர் பதிவிற்கு பிறகு, இந்த சலசலப்பு தொடங் கியது. சசி தரூர்  தனது டுவிட்டர் பதிவில், "சிறுபான்மையின பிரிவை சேர்ந்த ஒருவரை மிக மிக உயரிய அரசாங்க பொறுப்பில் இங்கி லாந்து நாட்டினர் ஏற்றவுள் ளனர். இதன் மூலம், உலகில் மிகவும் அரிதான ஒன்றை அவர்கள் செய் திருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்தியர்கள் ரிஷி சுனக்கின் இந்த ஏற்றத்தை கொண்டாடும் அதேவேளையில், நாம் நேர்மையாக ஒரு கேள்வியை கேட்போம், 'இது போன்று இங்கே(இந்தியாவில்) நடக்குமா?'" என்று கேள்வி எழுப் பினார். அவரது இந்த டுவீட்டை தொடர்ந்து, பல தலைவர்களின் டுவீட்கள் வெளியாகி வருகின்றன. 2004ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க முற் பட்டபோது, அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி பிரதமராக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வெளி நாட்டை பூர்விகமாக கொண்ட சோனியா காந்தி இந்திய பிரதமராகக் கூடாது என்று விமர்சனம் வைக்கப் பட்டது. 

இது குறித்து பாஜகவின் வெளியுறவுத் துறைத் தலைவர் விஜய் சவுதைவாலே கூறுகையில், "இந்திய வம்சாவளியைக் கொண்ட இங்கிலாந்தில் பிறந்த ரிஷியையும், இத்தாலியில் பிறந்த சோனியா வையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது(ராஜீவ்காந்தி உடனான திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக இந்திய குடியுரிமை பெற சோனியா மறுத்துவிட்டார்)" என்று விஜய் சவுதைவாலே தெரிவித்தார்.

No comments:

Post a Comment