புதுடில்லி, அக்.11 உயர் கல்வி நிறுவனங்களுக்கு அதிக தன்னாட்சி அதிகாரத்தை வழங்க, பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரிகளின் தன்னாட்சி வழி காட்டுதல்களை திருத்தி அமைத்து உள்ளது. இதன்படி இனிமேல் தன்னாட்சி தகுதியைப் பெறுவதற்கு, கல்லூரிகள் நேரடி யாக விண்ணப்பிக்கலாம். விண் ணப்பிக்கும் கல்லூரிகள் குறைந்த பட்சம் 10 ஆண்டுகளாக செயல் பாட்டில் இருக்க வேண்டும், 'நாக்' அல்லது என்.பி.ஏ. கமிட்டியின் 'ஏ' சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்பன போன்ற சில விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. 'ஏ' சான்றிதழை பெற்ற தன்னாட்சி கல்லூரிகள் 15 ஆண்டுகள் தொடர்ந்து செயல் பட்டிருந்தால் தன்னாட்சி தகு தியை நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டியதில்லை. நிரந்தர தன் னாட்சி தகுதியை பெற அதற்கு தகுதி உண்டு. இந்த தன்னாட்சி கல்லூரிகள் புதிய படிப்புகளை பல்கலைக்கழகத்தின் அனுமதி இன்றி தொடங்க முடியும். இது போன்ற திருத்தங்களை பல் கலைக்கழக மானியக்குழு செய் துள்ளது. தற்போது நாட்டில் சுமார் 500 கல்லூரிகள் தன்னாட்சி உள் ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment