ஹிந்து ராஜ்ஜியம் வந்து விட்டதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

ஹிந்து ராஜ்ஜியம் வந்து விட்டதா?

"பொட்டு இல்லனா.. தொழில் செய்யக் கூடாது" வைரலாகும் ஹிந்துக்களின் பதிவு

பொட்டு வைக்கவில்லை என்றால் தொழில் செய்யக்கூடாது என்பதை குறிப்பிடும் வகையில், 'நோ பிந்தி, நோ பிஸ்னஸ்' என்ற ஹேஷ்டேக் டிவிட் டரில் வைரலாகி வருகிறது.

ஹிந்துக்களின் பாரம்பரிய முறை களைப் பின்பற்றாமல், ஹிந்துக்களிடம் எந்த பொருள்களையும் விற்பனை செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

ஷெஃபாலி வைத்யா என்ற எழுத் தாளர் டிவிட்டரில் காட்சிப் பதிவு ஒன் றைப் பகிர்ந்துள்ளார். அந்தப்பதிவில்  தனியார் ஆடை நிறுவனம் பொட்டு வைக்காமல் தங்களது விளம்பர தூதர்களை நடிக்கவைப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ஷெஃபாலி வைத்யா பதிவிட்டுள்ள வீடியோவில், பொட்டு வைக்காமல் விளம்பர தூதர் களை நடிக்கவைக்கும் நிறுவனங்களின் ஆடைகளை நான் தீபாவளி பண்டி கைக்காக வாங்கப்போவதில்லை. பொட்டு வைக்கவில்லை என்றால் வியாபாரம் செய்ய முடியாது. அமெ ரிக்காவைச் சேர்ந்த ஆடை நிறுவனம் இந்தியாவிலுள்ள மக்களுக்கு ஆடை களை விற்பனை செய்கிறது. ஹிந்து பண்டிகையை குறிவைத்து நடத்தப் படும் வியாபாரத்திற்கு ஹிந்து கலா சாரம் கடைப்பிடிக்கப்படவில்லை. நோ பிந்தி, நோ பிஸ்னஸ் என ஹேஷ்டேக் இட்டு பதிவிட்டுள்ளார்.  ஹிந்து ஆதர வாளர்கள் பலர் இந்தப் பதிவை மறு முறை பகிர்ந்து வைரலாக்கி வருகின் றனர்.

ஒரு சிலர் இதற்கு எதிராகவும் சுட் டுரையில் குரல் எழுப்பி வருகின்றனர். பொட்டு வைப்பதும், வைக்காததும் தனிநபர் விருப்பம். தனி நபரின் விருப் பத்தில் பொட்டு வைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு இடமில்லை எனப் பதிவிட்டுள்ளனர்.

ஒருசிலர் பொட்டு வைத்து வெளி யான விளம்பரங்களையும் படங்களை யும் பகிர்ந்து ஹிந்து மதத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.

அதில்,ஹிந்துக்களின் பணம் வேண்டும் என்றால், ஹிந்துக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். விளம்பரங்களில் நடிப்பவர்களை பொட்டு வைக்காமல் இறுதிச்சடங்கில் இருப்பவர்களைப் போன்று காட்டுவது ஹிந்துக்களுக்கு எதிரான பிரகடனம் எனவும் சிலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் ஹிஜாப், ஜெய் சிறீராம், இறைச்சி போன்றவற்றை மதத்தின் அடிப்படையில் சேர்ந்ததாக கருதி பிரச்சினைகள் எழுப்பப்பட்டுவரும் நிலையில், தற்போது விளம்பர தூதர்கள் மற்றும் விளம்பரங்களை வைத்தும் பிரச்சினைகள் எழுந்து வருவதாக பலர் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment