மூன்று குழந்தைகள் உயிரிழந்த சிறீவிவேகானந்தா காப்பகம் மூடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

மூன்று குழந்தைகள் உயிரிழந்த சிறீவிவேகானந்தா காப்பகம் மூடல்

 அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

திருப்பூர்,அக்.8- "திருப்பூர் தனியார் காப்பகத்தின் அஜாக்கி ரதையாலும், மெத் தனப் போக்கினாலும், குழந்தைகள் மீது சரியாக கவனம் செலுத் தாத காரணத்தினாலும் தான் குழந்தைகள் இறப்பு ஏற்பட்டிருக்கிறது. காப்பகம் மூடப்பட்டு, நிர்வாகி மீது சட்டப்படி குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்றும் தமிழ்நாடு சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் அவிநாசி சாலை திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் சிறீவிவேகானந்த சேவாலயம் ஆதரவு ஏற்போர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், 11 சிறுவர்கள் உட்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செந்தில்நாதன் என்பவர் இந்தக் காப்பகத்தை நிர்வகித்து வந்துள்ளார்.

திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் தமிழ்நாடு சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று (7.10.2022) நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "குழந்தைகள் இறந்த அந்தக் காப்பகத்தை பார்த்தேன். உண்மையில், குழந்தைகளுக்கான ஓய்வு அறை போலவே இல்லை அந்த இடம். ஒரு பாதுகாப்பற்ற முறையில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு நூறு மீட்டருக்கு பிறகுதான், கழிப்பறை உள்ளது. இரவில் கழிப்பறை செல்ல முடியாமல், அந்தக் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தக் குழந்தைகளுடன் இரவு எந்தக் காப்பாளரும் தங்கியிருக்கவில்லை. யாராவது அங்கு தங்கியிருந்தால், குழந்தைகள் தங்களது பிரச்சினைகளை கூறியிருப்பார்கள். ஏதாவது செய்திருக்கலாம். ஒருவர் தங்கியிருக்கிறார். ஆனால், அவர் காப்பாளர் இல்லை என்று அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காப்பகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தனப் போக்கினாலும், குழந்தைகள் மீது சரியாக கவனம் செலுத் தாத காரணத்தினாலும்தான் குழந்தைகள் இறப்பு ஏற்பட்டி ருக்கிறது. இது நேரில் ஆய்வு செய்தபோது கண்கூடாகத் தெரிகிறது.

இந்தக் காப்பக நிர்வாகம் மெத்தனப்போக்குடன் செயல் பட்டு வந்ததால், குழந்தைகள் இறப்பு நிகழ்ந்திருக்கிறது. எனவே இந்தக் காப்பகம் மூடப்படுகிறது. இந்தக் காப்பகத் தில் உள்ள குழந்தைகளை ஈரோட்டில் உள்ள அரசு இல்லத்துக்கு மாற்றுவது தொடர்பாக குழந்தைகள் நலக் குழு ஆலோசனையின்படி நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட காப்பகத்தின் நிர்வாகியின் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி தலா ரூ. 2 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், ராக்கி யாபாளையம் கிராமம், மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில், மாதேஷ் (15), பாபு ( 13) மற்றும் ஆதிஷ் (8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 6.10.2022 அன்று மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த துயருற்றேன்.

உயிரிழந்த பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சையிலுள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விசாரணை குழு அமைப்பு

இந்த நிகழ்வு குறித்து சமூக நலத்துறை இயக்குநரகம் சார்பிலும், திருப்பூர் மாவட்ட வருவாய்த் துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுமம் சார்பிலும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த அய்ஏஎஸ் அதிகாரி மணி வாசன் தலைமையில் ஒரு கமிட்டியும் நியமிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கு 

பன்னாட்டு கற்றல் திட்டம்

சென்னை,அக்.8- பொறியியல் கல்வி கற்கும் மாணவர் களுக்கு உலகளாவிய வெளிப்பாடு, பன்னாட்டு கற்றல் அனுபவங்கள் மற்றும் வலையமைப்பு வாய்ப்புகள் கிடைக் கப் பெறுவதை உறுதி செய்யும் திட்டத்தின்கீழ் சிமாட்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் சவீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மலேசியாவில் உள்ள ஆசியா பசிபிக் பல்கலைக் கழகத்தில் மாணவர் பரிமாற்றத் திட்டத்தில்  பங்கேற்க சென்றுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு ஆகியவற்றில் மாணவர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த இந்த திட்டத்தில்  சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக "மலேசியாவில் தங்கி ஈடுபடு வார்கள். இந்த உலகளாவிய கல்வி அனு பவம் மாணவர்களின் அறிவுசார் எல்லை களை விரிவுபடுத்துவதுடன் வெளிநாட்டில்  அவர் களின் கல்வியை மேற்கொள்வதற்கான அடித்தளமும் அவர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment